• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

Joined
Sep 25, 2025
Messages
114
Reaction score
138
Points
43
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 24

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து மண்டபத்தை காலி செய்துவிட்டு, அங்கிருந்து கிளம்பவே நேரம் எட்டைக் கடந்துவிட்டது. அந்த நேரத்தில் சொந்த பந்தங்களை வீட்டிற்கு அழைத்தால், அங்கேயும் அவர்களை உபசரித்துச் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்பதால், வந்திருந்த உறவினர்களுக்கெல்லாம் மண்டபத்திலேயே பிரியாவிடை கொடுத்து புத்தியாக அனுப்பிவைத்துவிட்டார் நடராஜன்.

அதன் பிறகு, இருவீட்டார் மட்டும் நெடுமாறன் வீட்டுக்கு மணமக்களைக் கூட்டிவந்து பாலும் பழமும் கொடுத்தபின், "எல்லாரும் முதல்ல போய் உடுப்பை மாத்திக்கிட்டு வாங்கப்பா..." என்று பணித்தார் நடராஜன்.

மதியம் வீடு சென்றிருந்த போதே சகாயனின் மாற்றுத் துணிகளையும் கொண்டுவந்து விட்டிருந்ததால், சகாயனும், மித்ரனும் நெடுமாறன் காட்டிய அறைக்குச் சென்று அவசரமாகத் குளித்து தங்கள் உடுப்புக்களை மாற்றிக் கொண்டு வர, யாழினியும், நறுமுகையும் கூடக் குளித்து சல்வாரில் வந்து உட்கார்ந்திருந்தார்கள்.

அனைவரும் ஹாலில் கூடியிருந்து அன்று நடந்த கல்யாணச் சங்கதிகளைப் பேசியபடியிருக்க, பூங்குழலி எல்லோருக்கும் தேநீர் ஊற்றிக் கொண்டு வந்து கொடுக்க, ஆனந்தியும் கல்யாணத்துக்கு செய்த பலகாரங்கள் சிலதை தட்டில் வைத்துக் கொண்டு வந்தார்.

நடராஜன் தேநீரை எடுத்து குடித்தபடியே, "எப்படியோ கல்யாணமும், வரவேற்பும் நல்லபடியா முடிஞ்சுது.." என்று ஆசுவாசமாகச் சொல்ல,

"எனக்கு வந்த ஆட்களின் அளவைப் பார்த்து சாப்பாடு பற்றாக்குறை வந்திடுமோ என்று அடிக்கடி போய்ச் சாப்பாட்டை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன்" என்று நெடுமாறனும் சொல்ல,

"எனக்கும் இது தான் நான் முன்னேயிருந்து கவனிச்சுச் செய்யிற கல்யாணம்.. அதனால் ஒரு குறையும் வந்திடக்கூடாது என்று ரொம்பக் கவனமாக இருந்தேன்." என்று நடராஜனும் சொல்ல,

"சம்பந்தியம்மாவோட தங்கச்சி ஊரிலிருக்கிறா என்று சொன்னிங்களே அவங்க வரலையா?" என்று நெடுமாறன் தீடிரெனக் கேட்க,

"அவ மகளுக்கு நிறைமாதம் அவளை வீட்டில் தனிய விட்டுட்டு வரமுடியாமல் போச்சு" என்று ஆனந்தி சொல்ல,
ஊர் பேச்சை நெடுமாறன் எடுத்ததே வேண்டுமென்று தானே அதனால் நடராஜனுக்கு கண்பார்வை காட்டினார்.

நெடுமாறன் காட்டிய சைகையைப் புரிந்து கொண்ட நடராஜன், உடனே பிள்ளைகளின் பக்கம் திரும்பி, "இந்தாங்க... உங்க நாலு பேருக்கும் சேர்த்து நான் கொடுக்கிற ஹனிமூன் கிஃப்ட்! இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க நாலு பேருக்கும் மூணாருக்கு பஸ்சில் ஸ்லீப்பர் டிக்கெட் புக் பண்ணியிருக்கிறேன். நீங்க நாலு பேரும் முதல்ல இந்த இடத்தை காலி பண்ணிப் போனிங்கன்னா... நாங்க எல்லாரும் கல்யாணம் நடந்து முடிந்த அசதியில நிம்மதியா நல்லா தூங்குவோம்" என்றார் நடராஜன்.

தன் கணவன் பிள்ளைகளுக்கு ஏதோ சர்ப்ரைஸ்கொடுக்கிறார் போல என்று நினைத்து ஆனந்தியும் முகத்தில் புன்னகையோடு இதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடமும் நடராஜன், "இந்தா ஆனந்தி... உன் பிள்ளைகள் ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு நீ ரொம்பக் களைச்சுப் போயிட்டாய். அதனால உனக்காக ஒரு கார் ஏற்பாடு பண்ணியிருக்கேன். தங்கச்சியையும் உன் கூடக் கூட்டிக்கொண்டு உன் குலதெய்வம் கோயிலுக்குப் போயிட்டு, உன் தங்கச்சி வீட்டில் நல்லா ரெஸ்ட் எடுத்திட்டு வா... நானும் சம்பந்தியும் சேர்ந்து, பொண்டாட்டிகளோட தொந்தரவு இல்லாம ஜாலியா இருக்கப் போறோம்" என்று கண்ணடித்தார்.

சகாயனுக்கு ஊரை விட்டு மறைந்து மட்டும் தான் தந்தை இருக்கச் சொல்லியிருந்தார். இப்பொழுது தான் விடிய ரிதன்யாவிடம் சொன்னதுக்காக மூணாருக்கு பயணத்திக்கான ஏற்பாடுகள் செய்தது அவனுக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

"நாங்க போயிட்டா, அப்புறம் நீங்க ரெண்டு பேரும் சாப்பாட்டுக்கு என்ன செய்வீங்க?" என்று ஆனந்தி கவலையோடு கேட்க,

இப்பொழுது ரெண்டான (trend) "சாப்பாடா முக்கியம்? நிம்மதிதானே முக்கியம் சம்பந்தி!" என்றார் லேசான நையாண்டியோடு நெடுமாறன்.

"அண்ணா... நீங்களுமா இவருக்குத் துணையாப் பேசுறீங்க?" என்று நெடுமாறனைச் செல்லமாக முறைத்துப் பார்த்தபடியே ஆனந்தி சொல்ல,

அவர்கள் எல்லாம் ஆனந்தியை வீட்டிலிருந்து கிளப்பவே அப்படிச் செய்கிறார்கள் என்று தெரிந்த பூங்குழலி, "நீங்க முதல்ல கிளம்புற வழியைப் பாருங்க சம்பந்தி... சாப்பாட்டுக்கு அவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் கஷ்டப்பட்டால்தான் மனைவியோட அருமை என்னன்னு அவங்களுக்குத் புரியும்" என்று ஆனந்தியை அவசரப்படுத்திக் கிளம்பத் தயாரானார்.

"ஆனா... என்கிட்ட அடுத்த வேளை மாத்திக்கிறதுக்குக் கூட மாற்றுத் துணி இல்லையே" என்று தான் வரவேற்புக்கு உடுத்தியிருந்த பட்டுப் புடவையைப் பார்த்தபடியே ஆனந்தி ஞாபகப்படுத்த,

"அதையெல்லாம் பத்தி நீங்க யாரும் கவலைப்பட வேண்டாம் அம்மா.. உங்க எல்லாருக்கும் சேர்த்து நானே துணிகளைப் பக்காவாக பேக் பண்ணிட்டேன்!" என்றபடி, இரண்டு மூன்று பெரிய சூட்கேஸ்களைத் தள்ளிக் கொண்டு அங்கே வந்து நின்றாள் மித்ரா.

அப்போதுதான் ஆனந்திக்கு ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே, "அம்மா... எனக்குக் கடுமையான தலைவலியா இருக்கு. நான் வீட்டுக்குப் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு வாறேன்" என்று தலையைப் பிடித்தபடி மித்ரா தன்னிடம் அனுமதி கேட்டதும், பங்க்ஷனுக்கு நடுவில் அவளோடு மல்லுக்கட்ட முடியாமல் "சரி போ..." என்று தான் அனுப்பி வைத்ததும் நினைவுக்கு வந்தது.

'அடிப்பாவி! இவள் தலைவலி என்று பொய் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போனதே... இந்தத் துணிகளை எல்லாம் எடுத்து சூட்கேஸில் வைப்பதற்காகத்தானா?' என்று இப்போது உண்மை புரிய, தன் மகளைச் செல்லமாக ஒரு முறை முறைத்தார் ஆனந்தி.

அம்மா தன்னை முறைப்பதைப் பார்த்த மித்ரா, "அம்மா... என்னை முறைச்சு ஒரு பயனும் இல்லை! இந்த மாஸ்டர் பிளான் போட்டுக் கொடுத்த அப்பாவை முறைங்க" என்று தன் தந்தையை நேக்காகத் தாயிடம் மாட்டிவிட்டாள் மித்ரா.

"இப்படித்தான் பிள்ளைகளை என்னிடம் பொய் சொல்றதுக்கு ஊக்குவிக்கிறீங்களா?" என்று கணவனிடமும் போலிக் கோபத்துடன் ஆனந்தி கேட்க,

"எனக்கு என் பிள்ளைகளை விட நீ நல்லாயிருக்கணும் ஆனந்தி... சோ, உனக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்" என்று இந்த முதுமை நிலையிலும் தன் காதலை நடராஜன் அழகாக வெளிப்படுத்தினார்.

அவர்களின் பேச்சைக் கேட்டு ரசித்த பூங்குழலி, "சம்பந்தி... முதலில் உங்களுக்கும் அண்ணிக்கும் சுத்திப் போடணும். இருங்க, நான் போய் சமையலறையில இருந்து உப்பும் மிளகாயும் எடுத்துட்டு வர்றேன்" என்று சமையலறை நோக்கி நகரப் பார்த்தாள்.

அப்போது யாழினி புன்னகையுடன், "அம்மா... நீங்க இப்போ அப்பாவின் மேல் கோபமாகி வெளிநடப்பு பண்ணனும் அம்மா, அதை மறந்துட்டீங்க" என்று தன் தாயுக்கு நினைவுபடுத்தினாள்.

"இருடி... இத்தனை அழகா கல்யாணம் நடந்திருக்கு, எல்லோருக்கும் கண்டிப்பாக் கண் பட்டிருக்கும். முதல்ல கண் திருஷ்டி கழிச்சுட்டு, அப்புறமா எல்லாரும் கிளம்புவோம்" என்று பூங்குழலி சமையலறைக்குள் சென்றார்.

அங்கே மேடையில் நின்ற அசதியிலும், காலையிலிருந்து உடுத்தியிருந்த கனமான ஆடைகளாலும் களைத்து ஓய்ந்து போயிருந்த நறுமுகை, "அப்பா... எனக்குத் தூக்கம் தூக்கமா வருதுப்பா..." என்று நெடுமாறனின் தோளை லேசாக உரசியபடி மெதுவாகச் சொன்னாள்.

அதை கவனித்துவிட்ட மித்ரன் தன் அண்ணனை வம்புக்கு இழுக்கும் தொனியில், "அண்ணா... உனக்கு இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்த மாதிரித்தான்! அண்ணி இப்பவே தூங்கி வழியிறாங்க பார்" என்று கிசுகிசுத்தான்.

சகாயன் தம்பியை முறைத்து, "டேய்... நாம ஸ்லீப்பர் பஸ்ஸில்தான் போறோம் என்றாலும், அங்கேயே எதையும் ஆரம்பிக்க முடியாதுடா! எல்லாம் மூணார் போயிட்டுதான் பார்த்துக்கணும்" என்று கண்டிப்பாகத் தம்பியிடம் மெதுவாகச் சொன்னான்.

மித்ரனோ, "அப்படியா?" என்பது போல மோகம் பொங்க, ஏக்கமாகத் தன் மனைவி யாழினியைப் பார்க்க,

அவனது அந்தப் பார்வையைப் பார்த்த சகாயன், 'இவன் இரவு கையைக் காலை வைத்துக்கொண்டு பஸ்சில் சும்மாயிருக்கமாட்டான்' என எண்ணியபடி "ஏன்டா... உனக்கு என்ன பிட்டுப்படம் நடிச்சு ஃபேமஸ் ஆகணும்னு ஆசை ஏதும் இருக்கா?" என்று கோபமாகக் கேட்டான்.

அதற்கு மித்ரன் அசராமல், "நாம பேசாமல் ஃபர்ஸ்ட் நைட்டை இங்கேயே முடிச்சுட்டுக் கிளம்புவோமாண்ணே?" என்று கேட்க,

"நீ அப்பாகிட்ட உதை வாங்க ரெடின்னா... போய் அப்பாகிட்டயே கேளுடா!" என்றான் சகாயன் கடுப்பாக.

அவனும் தன் புது மனைவியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு விரதம் காக்கும் முடிவில் இருக்கவில்லை எனினும், பஸ்ஸிலேயே அவளிடம் நெருக்கம் கொள்வது உசிதமில்லை என்று அவனது ஆண் மனம் எண்ணியது.
 
Previous thread
Next thread

Latest threads

Top Bottom