• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

Writer✍️
Joined
Sep 18, 2024
Messages
375
Reaction score
571
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

அத்தியாயம் 7​


po-ok new.webp


“டேய் தியாகு உங்கம்மா சண்முகம் வீட்டு தெருவுக்கு வந்திருக்காடா. அவங்க வீடு ரொம்ப நல்லாருக்காம் .சூப்பர் மார்க்கெட் கூட கட்டி இருக்காங்க என்று சந்தோஷமா என்கிட்ட வந்து சொன்னாடா….”என்று மகனுக்கு போன் போட்டு சொன்னார் மோகனசுந்தரம்.



“என்னப்பா சொல்றீங்க? அம்மா கிட்ட பேசிட்டீங்ககளா?


“ஆமா….”


“அப்பா நிஜமாத்தான் சொல்றீங்களா …..? என்று அண்ணனிடம் போனை பறித்து பேசினான் ராஜன்.


“ஆமாடா உங்கம்மா ஏதோ இன்னைக்கு கொஞ்சம் நல்ல மாதிரி பேசினா. இங்க இருந்து கிளம்பினப்போ உங்க ரெண்டு பேர் கிட்டயும் சண்ட போடுற போல தான் கிளம்பி வந்தா.ஆனா கொஞ்ச நேரத்துல திரும்பி வந்துட்டா. தேனாம்பாள் ரொம்ப நல்லா வந்துட்டா. நல்ல பெரிய வீடு தான் கட்டியிருக்கா.சூப்பர் மார்க்கெட் கூட கட்டி இருக்காங்க என்று கண்ணு கலங்கி பேசினா.என்னால் நம்ப முடியல….”


“அம்மாகிட்ட சேன்ஜ் தெரியுதுன்னு சொன்னது உண்மை ஆயிடுச்சு. பார்த்தீங்களா?என்றான் தியாகு.



“உங்கம்மாவை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் நம்ப முடியாது. நாளைக்கு அவங்க அண்ணன் சேவகப்பெருமாளை பார்த்தால் என்ன பண்ணி வைப்பாளோ யாருக்கு தெரியும்.ஆனாலும் கொஞ்சம் மாறியிருக்கிறா போல தான் தெரியுது….”



“இல்லப்பா….. அம்மா இப்பெல்லாம் மாமா கூட பேச்சுவார்த்தை எல்லாம் குறைச்சிட்டாங்க. கவனிச்சு பாருங்க புரியும்…..”விடாமல் சொன்னான் தியாகு.



“மாறினா நமக்கு தானே நல்லது. என்னமோ இனியாச்சும் உங்கம்மாக்கு புத்தி வந்தது புழைச்சுக்கிட்டா போதும்….”.



தந்தை சொன்னது போல அன்னக்கொடி வீட்டுக்கு போய் வந்த மகன்களிடம், அதைப் பற்றி ஒரு வார்த்தையைக் கேட்கவில்லை நவநீதம் என்பதுதான் உலக அதிசயம்.


இதோ இரண்டு வாரங்கள் ஓடிப்போக மனைவியை கூட்டி போக பெங்களூர் வந்து விட்டான் ராஜன். அண்ணனை கோயம்புத்தூரில் குடியேறும் வீட்டுக்குத் தேவையானதை எல்லாம் பார்த்து வாங்கி போடு என்று பணம் கொடுத்து விட்டு தான் கிளம்பி வந்திருந்தான் அவன்.


“நான் கோயம்புத்தூருக்கு போக மாட்டேன் பாட்டி….”என்று முரண்டு பிடித்தாள் அன்னக்கொடி.


“புருஷன் கூட போய் வாழறதுக்கு என்ன யோசிக்கிற….?


“கிழவிக்கு இருக்குற கொழுப்பை பாருடா கேசவா….” என்று எரிச்சலோடு வந்தது அன்னக்கொடியின் குரல்.



ராஜனுடன் போக மாட்டேன் என்று அடம் பிடித்தவளை பாட்டியின் துணையுடன் கோயம்புத்தூருக்கு இழுத்துக் கொண்டு வந்து விட்டான் அவன் .



கணவனிடம் ஒரு வார்த்தை பேசாமல் அவனை முறைத்தபடி சுற்றிக்கொண்டிருந்தாள் அன்னக்கொடி.


புது கம்பெனிக்கும் குடிபோகும் வீட்டுக்கும் ஒரே நாளில் பால் காய்ச்சுவது போல் நாள் பார்த்திருந்தான் வரதராஜன்.


இரண்டு பக்கத்து குடும்பம் மட்டும் தான். தன் பெற்றவர்களையும் அண்ணன் குடும்பத்தையும் ஒரு இடத்திலும்,அன்னக்கொடியின் பெற்றவர்களையும் அவள் அக்கா குடும்பத்தையும் வேறு ஹோட்டலிலும் என்று தனித்தனியாக தான் ரூம் போட்டிருந்தான்.அவர்களுடன் தான் மனைவியையும் கொண்டு போய் விட்டிருந்தான்.



இரண்டு குடும்பமும் நேரில் சந்திக்கும் போது என்ன வருமோ என்று திக்குதிக்கென்று இருந்தது வரதராஜனுக்கு.அந்த பயத்தில் தான் வீட்டு ஆட்களை தவிர யாரையும் அழைக்கவில்லை அவன்.வெளி ஆட்களின் முன் தாய் ஏதாவது வாயை விட்டு விடுவாரோ என்ற பயம் இன்னும் அவனை விட்டு போகவில்லை.



அதிகாலையில் தன் காரில் தாய் தந்தையை கூட்டிக்கொண்டு தன் குடும்பத்தோடு, தம்பியின் புது வீட்டுக்கு வந்து சேர்ந்தான் தியாகு.


மறுபக்கம் வாடகை வண்டியில் தன் குடும்பத்தோடு வந்து சேர்ந்தாள் அன்னக்கொடி.


தங்கையின் கையை பிடித்து அந்த வீட்டுக்கு அழைத்து போனாள் பூங்கொடி.


காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் தான் வீட்டுக்கு பால் காய்ச்ச ஏற்பாடாகியிருந்தது.


“சண்முகம் நல்லா இருக்கியா? என்றார் மோகனசுந்தரம் சண்முகத்தை பார்த்து.


“ஆஹ்….ஆமா நல்லா இருக்கேன்….” என்று மெதுவாக சொல்லிக்கொண்டு விலகி வந்த தந்தையை தான் பார்த்து கொண்டிருந்தாள் அன்னக்கொடி.



எல்லோரும் வீட்டுக்குள் நுழைய நவநீதம் பேரனை தூக்கி கொண்டு அங்கிருந்த ஒரு அறைக்குள் நுழைந்து கொண்டார். எல்லோரையும் நேரில் காண ஒரு மாதிரி சங்கடமாக இருந்தது அவருக்கு.



தேனாம்பாள் இரண்டு மகள்மாரையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு பால் காய்ச்சுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை பார்க்கத் தொடங்கினார்.


“பால் காய்ச்ச போறாங்க பார்க்கலாம் வா குமரா…..”என்று மாமியார் இருந்த அறைக்குள் வந்து மகனை தூக்கி கொண்டாள் சுகந்தி.



“அத்தை நீங்க வரலையா….?



“இல்ல சுகந்தி நீ போ.நான் இங்கன இருக்கிறேன்…..”என்றார் நவநீதம்.



மகனுடன் சமயலறைக்குள் வந்தாள் சுகந்தி.



“வாங்கக்கா….குமாரா நல்லா இருக்கியா ?என்று அவர்கள் வரவேற்றாள் அன்னம்.



அன்னக்கொடிக்கு சுகந்தியுடன் பெரிதாக பழக்கம் இல்லை.ஆனால் திருமணம் முடிந்ததும் தியாகுவுடன் நேராக தங்கள் வீட்டுக்கு வந்தாள் என்ற மரியாதை இருக்கிறது.


அத்துடன் மகன் பிறந்ததும் போன் போட்டு அவளுக்கு சொல்லியிருந்தான் தியாகு.அவ்வப்போது மகனுடன் தங்கள் வீட்டுக்கு வந்து போவான் என்றும் அவளுக்கு தெரியும்.ஏன் லீவு கிடைக்கும் போது பெங்களூரில் இருக்கும் பாட்டியையும் தன்னையும் கூட வந்து பார்த்து போயிருக்கிறான். நவநீதம் மகன் தியாகுவா இப்படி என்று ஆச்சரியப்பட்டு இருக்கிறாள் அவள்.




நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி ஹாலில் உட்கார்ந்திருந்தார் அன்னக்கொடியின் பாட்டி.



இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அப்பாட்மென்ட் அது.ஒரு அறைக்குள் உட்கார்ந்திருந்தார் நவநீதம்.ஆண்கள் எல்லாரும் ஹாலில் உட்கார்ந்திருந்தனர்.



மகன் வாங்கிய புது வீட்டுக்கு தனியாக ஐயர் வைத்து பூஜை போட்டிருந்தார் நவநீதம் என்பது தனிக்கதை.இந்த வீட்டை ராஜன் வாங்கியிருக்கிறான் என்ற விஷயம் அன்னக்கொடிக்கும் அவளை சேர்ந்தவர்களுக்கும் இன்னும் தெரிந்திருக்கவில்லை.



மகள் தனி குடித்தனம் வந்ததும் வீட்டுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தபடி கையில் பணத்துடன் கிளம்பி வந்திருந்தார் சண்முகம்.ஆனால் இங்கே வீட்டில் எல்லாம் வாங்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து என்ன செய்வது என்ற யோசனையுடன் உட்கார்ந்திருந்தார் அவர்.


ரோஜாப்பூ வண்ணத்தில் தங்க நிற கரை வைத்த புடவையில் அத்தனை அழகாய் இருந்தாள் அன்னக்கொடி.அவளை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் நவநீதம்.அவள் அங்குமிங்கும் நடந்து வேண்டியதை எடுத்துக் கொண்டிருந்தாள் .திறந்திருந்த அறை கதவின் ஓரம் அமர்ந்திருந்தவருக்கு வெளியே நடப்பது எல்லாம் அப்படியே தெரிந்தது.



மாமியார் தன்னை பார்ப்பது தெரிந்தும் அவர் இருக்கும் பக்கம் திரும்பவில்லை அன்னக்கொடி.



“என்னைய விட எங்கம்மா தான் என் பொண்டாட்டிய நல்லா சைட் அடிக்குது பாரு….” அண்ணனிடம் மெல்லிய குரலில் சொன்னான் ராஜன்.



“அதில உனக்கு ரொம்ப வருத்தம் போலயே….”என்று சிரித்தான் தியாகு.



“பின்ன இல்லையா….? சொன்னபடி எழுந்து கொண்டான் ராஜன்.



பால் காய்ச்சி முடிந்ததும் ஒரு தட்டில் பால் நிரம்பிய கப்புகளை வைத்து எல்லோருக்கும் கொடுக்க வந்தாள் அன்னக்கொடி.



உடனே எழுந்து போய் மனைவியிடமிருந்து தட்டை தன் கையில் வாங்கிக் கொண்டு எல்லோருக்கும் கொடுத்தான் ராஜன்.



தாயிடம் அவள் பாலை கொண்டு போனால் என்ன சொல்வாரோ என்ற பயம் அவனுக்கு.



மாமியார் என்ன சொல்லுவாரோ என்று பயந்து போயிருந்த அன்னக்கொடி நன்றியுடன் கணவனை பார்த்தாள்.



குமரன்,இலக்கியா இரண்டு சிறுவர்களின் சத்தத்தை தவிர வேறு எந்த சத்தமும் இல்லை அந்த புது வீட்டில்.



போனில் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை தேடி எடுத்து சத்தமாக போட்டு விட்டாள் பூங்கொடி.



மனைவியை மெச்சுத்தலாக பார்த்தான் சரவணன்.



“ஏன்டா சின்னவனே உன் பொண்டாட்டிய என்னடா பண்ணிடுவேன். எதுக்கு நீ பால் கொண்டு வந்து குடுக்கிற ….?அவ வீட்டுக்கு வந்தவங்களை வான்னு கூப்பிட்டு இந்த பால தந்தா என்னடா….?



“ஏம்மா இது உன் பையன் வீடும் தானே .நான் பால் குடுத்தால் என்ன தப்பு.ஏன் என் பொண்டாட்டி தந்தா தான் குடிப்பீங்களா என்ன?



தாய் அன்னக்கொடியை தன் பொண்டாட்டி என்று சொன்னதை கேட்டதும் அத்தனை ஆனந்தம் அவனுக்கு.



“அது சரி…. ஆமா வீட்டில இருந்த தாலியை எப்ப எடுத்துட்டு போய் அவ கழுத்துல போட்டு விட்ட சின்னவனே ?



சட்டென்று பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான் ராஜன்.



“அம்மா மெல்ல பேசுங்க….அது அன்னைக்கு மாமா வீட்டு கிரகப்பிரவேச பூஜையில வச்சு தான் போட்டு விட்டான்….” என்று சொன்னான் தியாகு.




“பரவாயில்லை இதெல்லாம் உன் தம்பிக்கு நல்லா தெரிஞ்சிருக்குடா தியாகு….” என்றார் நவநீதம்.



அவர்கள் பேசுவது அங்கிருந்த எல்லாருக்கும் கேட்டாலும் ,யாரும் எதுவும் சொல்லாமல் தங்கள் வேலையில் கவனமாக இருப்பது போல கட்டிக்கொண்டார்கள்.



இங்கு பால் காய்ச்சி விட்டு புது ஆபிஸ் பூஜைக்கு போக வேண்டும். ஏழு மணிக்கு அங்கு இருக்க வேண்டும்.அங்கு பூஜை முடிய தான் காலை சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.




இதோ வீட்டிலிருந்து எல்லோரும் கம்பெனிக்கு வந்து விட்டார்கள்.



பூஜை முடிந்ததும் பாட்டியின் காலில் விழுந்து ராஜனும் அன்னமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார்கள்.



இரண்டு குடும்பமும் சந்திக்கும் போது என்ன வருமோ என்று பயந்து போயிருந்த அன்னக்கொடியும் ராஜனும் அப்படி எதுவும் நடக்காமல் இருந்ததே போதும் என்று நிம்மதி கொண்டார்கள்.



என்னதான் தன்னுடன் சண்டை போட்டாலும் கிளம்பி வந்து எல்லாவற்றையும் சரியாக நடத்தி முடித்த மனைவியை நன்றியுடன் பார்த்துக்கொண்டிருந்தான் வரதராஜன்.


நவநீதமணி எப்படி இத்தனை அமைதியாக இருக்கிறார் என்ற யோசனையுடன் காலை உணவை சாப்பிட்டு கொண்டிருந்தார்கள் அன்னக்கொடியின் குடும்பத்தினர்.

தொடரும் ..............
 
Last edited:

Latest threads

Top Bottom