- Joined
- Sep 16, 2024
- Messages
- 804
- Reaction score
- 4,614
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
உறையுள் உறையும் உதிரம் – 8
View attachment 675
ராமலிங்கம் இருக்கும் இடத்தை நோக்கி, அந்த வண்டி வேகமாகச் சென்று கொண்டு இருக்க, வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த திலீப்பும், அவன் அருகே அமர்ந்திருந்த பிரதாப்பும், அன்று காலையில் தாங்கள் சேகரித்தவற்றை நிதானமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.
“சாரங்கன், என்ன சொன்னார் சார்? எனி லீட்?” என்று திலீப் வினவ,
பிரதாப் உதட்டோரக் குறுஞ்சிரிப்புடன், “எஸ்.. அந்தக் கசக்கப்பட்ட பாண்டு பேப்பர் துண்டில், ஒரு பிங்கர்-பிரிண்ட்டோட ஒரு பகுதி கிடைத்து இருக்குது.. அந்த பிங்கர்-பிரிண்ட்டும், சுந்தரி புடவையில் இருந்து கிடைத்த ஹேர் சம்பிள் டி.என்.ஏ-வும், ராமலிங்கத்தோடதா தான் இருக்கும்.. பார்க்கலாம்..! டாக்டர் வைஷ்ணவி, என்ன சொன்னாங்க?” என்றான்.
“முதல் இரண்டு கொலையில் இருந்து இது மாறுபட்டு இருக்குதுன்னு சொன்னாங்க சார்.”
“ஹ்ம்ம்.. அது பார்க்கும் போதே தெரிந்ததே! முதல் இரண்டு கொலையிலும், பாரன்சிக் அண்ட் போஸ்ட்-மார்டம் ரிபோர்ட்ஸ் மோர் ஆர் லெஸ் சேம் தான்.. ஒரே ஒரு வித்தியாசம், செல்வநாயகம் இறந்ததுக்கு ஹார்ட் அட்டாக் காரணம். ஆனா, மதனகோபால் இறந்ததுக்குக் காரணம், எக்ஸ்செஸ்ஸிவ் ப்ளீடிங்.. செல்வநாயகமும் அப்படி இறந்திருக்க வேண்டியது தான், ஆனா அதுக்கு முன்னாடியே பயத்தில் அவரோட ஹார்ட் நின்னுடுச்சு.. லேடீஸ் ரெண்டு பேர் இறப்பும், ஒரே மாதிரி தான் நடந்து இருக்குது..
சரி, சுந்தரி ரிப்போர்ட் பத்திச் சொல்லுங்க.. ரிஸ்ட் வெயினை வெட்டியதில் இவ்வளவு சீக்கிரம் இறக்க முடியாது.”
“ஆமா சார்.. மரணத்திற்கான காரணம் ப்ரைன் ஹிமரேஜ்.. கூடவே கையை ஆழமா கிழிச்சதில், இரத்தப் போக்கு ஏற்பட்டு இருக்குது.. ரெண்டும் சேர்த்து சீக்கிரம் இறப்பு நடந்து இருக்குது.. தலை எதிலோ பலமா மோதியதால், ப்ரைன் ஹிமரேஜ் நடந்து இருக்குது..
கையில் இருந்த வெட்டுகளின் ஆழத்தையும், கோணத்தையும் வைத்து, சூசைட் இல்லைனு சொல்றாங்க. அதுவும், இடதுகைப் பழக்கம் இருக்க சுந்தரியால், வலது கையை வைத்து இவ்வளவு வலிமையாவும் ஆழமாவும் வெட்ட முடியாதுன்னு சொன்னாங்க”
“கண்டிப்பா சண்டை நடந்து இருக்குது.. சுந்தரி போன் நல்லாவே உடைந்து இருந்ததே! சண்டையில், தலையில் அடிபட்டு இருக்கணும்..! அவன் சூசைடு மாதிரி செட்-அப் செய்துட்டு, தப்பித்து இருக்கணும்” என்ற பிரதாப், “ஆம்புலன்ஸ் எப்படி அவ்ளோ சீக்கிரம் சுந்தரி வீட்டுக்கு வந்ததுன்னு கேட்கச் சொன்னேனே! என்னாச்சு?” என்றான்.
“அந்த நேரத்தில், ரெண்டு தெரு தள்ளி ஒரு பேஷண்ட்டை வீட்டில் விட வந்து இருக்காங்க.. அதான், உடனே வந்ததா அந்த டிரைவர் சொன்னான்.”
“ஹ்ம்ம்” என்றவன் புருவத்தை சுருக்கியபடி, “திலீப், அந்த ஸ்பிலெண்டரை மடக்கிப் பிடிங்க.” என்றான்.
அடுத்த இரண்டு நிமிடத்தில், அந்த இரு சக்கர வாகனத்தின் முன் குறுக்காக வண்டியைத் திலீப் நிறுத்தி விட, வேகமாக இறங்கிய பிரதாப், அந்த வண்டியை ஓட்டியவனின் சட்டையின் கழுத்துப்பட்டையை இறுக்கமாகப் பிடித்து இருந்தான்.
அவன், “சார்.. அவசரமா போறேன்.. அதான் ஹெல்மெட் போடல.” என்று கூற,
திலீப், “மேல அவசரமா போயிடாத” என்றும்,
பிரதாப், “சார், அவ்ளோ அவசரமா எங்க போயிட்டு இருக்கிறீங்க?” என்றும் கேட்டான்.
“அது, வீட்டு..க்குத் தான் சார்...”
“ஓ! ரொம்ப அவசரமோ?”
“ஆ..மா சார்.”
“அப்போ, காரில் ஏறு, சீக்கிரம் போயிடலாம்” என்றபடி அவனை இழுக்க,
“அர்ரெஸ்ட் வாரண்ட் இருக்கா சார்?” என்று திமிறியபடி, சற்றுக் குரலை உயர்த்தினான்.
“அடிங்க! சவுண்ட் கூடுச்சு, வாய பேத்துருவேன்.. கௌன்சிலர் சக்கரபாணி ஆளு தானடா நீ? பேரென்ன?”
“விமல் சார்.. இப்போ.. நான் அவராண்ட வேலை பார்க்கல சார்.”
“எத்தனை நாளா வேலை பார்க்கல?”
“அஞ்சு மாசமா.”
“அந்த லத்திய எடுங்க திலீப்.. பொய் சொல்ற வாய் வழியா, தொண்டைக்குள்ள அப்படியே இறக்குவோம்.”
“சார்.. சார்.. நான் பொய் சொல்லலை சார்.”
“அஞ்சு மாசமா வேலை பார்க்காதவன் தான், போன மாசம் விவேகானந்தா நகர் சூப்பர் மார்கெட் முன்னாடி ஒருத்தர மிரட்டினியோ!”
“சார்.. அது.. எதேச்சையா ஐயாவைப் பார்த்தேன்.. அதான்..”
“கூட சேர்ந்து மிரட்டினியோ!” என்று திலீப் நக்கலாக வினவ,
பிரதாப், “இவனைப் பிடிச்சு வண்டி உள்ள போடுங்க திலீப்.” என்றான்.
அப்பொழுது அங்கே ஏட்டுடன் வந்த துணை ஆய்வாளர் சிவராம், விறைப்பாக வணக்கம் வைத்து, “என்னாச்சு சார்?” என்று கேட்டான்.
“சார்வாள் யாருனு தெரியுதா?” என்ற பிரதாப்பின் கேள்வியில், சற்று கூர்ந்து பார்த்தவன், “சார்! இவன் அந்த கௌன்சிலர் ஆளு” என்றான்.
“அவனே தான்.. நீங்க எங்க இந்தப் பக்கம்?”
“நம்ம கேஸ் விஷயமா தான் சார்.. செல்வநாயகம் வீட்டில்...” என்று ஆரம்பிக்க,
“ஒன் மினிட்” என்று தடுத்த பிரதாப், அந்த வழியே வந்த மூன்று சக்கர வாகனத்தை நிறுத்தி விமலை அதனுள் ஏற்றி, வண்டியின் கம்பியுடன் சேர்த்து அவனது கையில் விலங்கிட்டு, அவனது கைபேசியை எடுத்துக் கொண்டபடி, “ஏட்டையா, இவனைப் பார்த்துக்கோங்க” என்றான்.
“ஓகே சார்” என்றபடி அவர் அவனைக் கண்காணிக்கத் தொடங்கினார்.
பிரதாப் சற்று நகர்ந்து நிற்கவும் சிவராமும் நகர்ந்து வந்து, “சாரி சார்” என்றான்.
“இட்ஸ் ஓகே.. இப்போ சொல்லுங்க”
இருவரும் குரலை சற்று தணித்துப் பேசினர்.
“செல்வநாயகம் வீட்டில் கடைசியா வாடகைக்கு இருந்தவங்க, இப்போ இருக்கிற இடம் பத்தி நேத்து நைட் தான் சார் துப்பு கிடைச்சுது. ஹஸ்பண்டு, வைஃப் ரெண்டு பேரும் வொர்கிங்.. அதான் காலையிலேயே கிளம்பிட்டேன். அந்த ஏரியா ஏட்டுக்கு தெரியும்னார், அதான் ரெண்டு பேரும் போய் விசாரிச்சிட்டு, எனக்குத் தெரிந்த நகை ஆசாரி கிட்ட, ராஜசேகர் ப்ரேஸ்லெட் பத்தி விசாரிச்சுட்டு வந்தோம்.”
“குட்.. எனி லீட்?”
“நோ சார்.. ரெண்டு இடத்திலும் பெருசா எதுவும் கிடைக்கலை. அந்த டெனன்ட், இந்த வருச ஸ்கூல் முடிந்ததும், சொந்த ஊருக்கு போகப் போறாங்களாம்.. அது ஏதோ பாமிலி இஸ்ஸுஸ் இருக்கும் போல சார்.. விசாரணைக்கு பெருசா ஒத்துழைக்கவும் இல்லை. வேலை செய்ற இடத்துக்குக் கூட வந்து இருக்கலாமே, ஏன் வீட்டுக்கு வந்தீங்கனு ஒரு படபடப்புடன் தான் பேசினார்.
அப்புறம் அந்த ப்ரேஸ்லெட்.. நீங்க சந்தேகப்பட்டது போல நகைக் கடையில் வாங்காம தங்கமா ஆசாரி கிட்டச் செய்யக் கொடுத்தது போல தான் தெரியுதுன்னு சொன்னார்.”
“சரி பார்க்கலாம்.. இப்போ ராமலிங்கத்தைப் பிடிக்க தான் போயிட்டு இருக்கோம்.. விமல் பைக்கை ஓரமா நிறுத்திட்டு, அவனை ஆட்டோவில் ஸ்டேஷன் கூட்டிட்டுப் போங்க.. ஏட்டையா உங்க பைக்கை ஓட்டிட்டு வருவார்.”
“ஓகே சார்.”
அவனிடம் தலையசைத்து, பிரதாப் மற்றும் திலீப் கிளம்பினர். அடுத்த பத்தாவது நிமிடத்தில், ராமலிங்கம் இருக்கும் வீட்டின் முன் வண்டி நின்றது.
இவர்கள் வீட்டின் தெருவாசல் கதவைத் திறந்து உள்ளே செல்லவும், அங்கிருந்த ஆள்களில் ஒருவன், “பார்டா! கான்ஸ்டபிளுக்குக் கொடுத்தது பத்தாதுன்னு பெரிய பெரிய ஆபீசர்ஸ் எல்லாம் வந்து இருக்காங்க.” என்று எகத்தாளமும் நக்கலும் கலந்த குரலில் கூறினான்.
“ஹ..ஹான்!” என்ற பிரதாப் சட்டென்று அங்கே மரத்தில் சாய்த்து வைத்திருந்த சிலம்பம் விளையாடும் கம்பை எடுத்து, பேசியவனின் வலது தோள்பட்டையில் ஓங்கி அடித்துவிட, அவன் வலியில் அலறினான்.
கம்பை ஒற்றைக் கையில் சுற்றியபடி, “இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா!” என்று நக்கலுடன் கேட்டான்.
“ஏய்!” என்று எகிறியபடி இன்னொருவன் வர,
“போலீஸ்காரன் மேலயே கை வைக்கிறீங்களாடா!” என்றபடி ஒவ்வொருத்தனையும் விலாசி விட்டான்.
“என்னா போலீஸு! வித்த காட்ட எவ்வீடு தான் கிடைச்சுதா?” என்று அதீத நக்கலுடன் கேட்டபடி ராமலிங்கம் வீட்டினுள் இருந்து வந்தான்.
“ஸ்டேஷன் வந்தா இன்னும் என்னென்ன தெரியும்னு காட்டுறேன்.”
“பார்டா!” என்று சிரித்தவன், “எனக்கும் சட்டம் தெரியும் போலீஸு.. எதா இருந்தாலும் இங்கேயே கேளு..! நான் அமைதியா இருக்கச்சியே கிளம்பிடு.. இல்ல... ‘ஏசிபி’னுலாம் பார்க்க மாட்டேன்.” என்றுவிட்டு திலீப்பைப் பார்த்து, “என்ன இன்ஸு.. நம்மப் பத்தி சொல்றது இல்லியா?” என்றான்.
பிரதாப்போ, “சட்டம் தெரிந்த மகாபிரபுவே! மழைக்காவது ஸ்கூல் பக்கம் ஒதுங்கியது உண்டா! படிக்கத் தெரியுமா? இது அரெஸ்ட் வாரண்ட்” என்றதும்,
ராமலிங்கம் சுதாரித்து ஓட ஆரம்பிக்க, பிரதாப் கையில் இருந்த கம்பை அவனது காலில் எறிந்து, அவனை கீழே விழச் செய்து இருந்தான்.
திலீப் சென்று அவனை இழுத்து வர, மற்றவர்களை நோக்கிய பிரதாப், “அடுத்து உங்க கௌன்சிலர் தான்.. ரெடியா இருக்கச் சொல்லுங்க” என்றுவிட்டு கிளம்பினான்.
*******
ராமலிங்கம் என்னவென்று உணரும் முன், அவனது தலை முடியைப் பிடுங்கி, சிறிய ஒளி ஊடுருவும் உறையில் போட்டு, சிவராமிடம் கொடுத்து கண் காட்டினான்.
அடுத்து ராமலிங்கத்தை அறையில் தனிமையில் அடைத்து வைத்துவிட்டு, ரோஷன் மட்டும் இருக்கும் அறையினுள் சென்றான்.
“எங்களை எதுக்கு சார் வரச் சொன்னீங்க? காருண்யா எங்க?”
“இங்க தான் இருக்காங்க.. சில உண்மைகளைத் தெரிஞ்சுக்க, வரச் சொன்னேன்.”
“என்ன சார்?”
பிரதாப், அவனது புதிய கைச்சங்கிலி இரசீதின் நகலை அவன் முன் வைத்தான்.
அதைப் பார்த்து அதிர்ந்தவன் நொடிப் பொழுதில் சுதாரித்து, “இதை எதுக்கு சார் காமிக்கிறீங்க?” என்று பயத்தை மறைத்தபடியே கேட்டான்.
பிரதாப் அழுத்தத்துடன் பார்க்கவும், அவன் சிறு தடுமாற்றத்துடன், “என்ன சார்?” என்றான்.
“மிஸ்டர் மதனகோபால் உங்களுக்குத் தந்த ப்ரேஸ்லெட் எங்கே?”
“அது.. அதை நான் மிஸ் பண்ணிட்டேன்.. காருண்யா வருத்தப்படுவான்னு தான் அவளுக்குத் தெரியாம அது போலவே புதுசா வாங்கினேன்”
முன்தினம் இருவரும் பேசியதில், அந்த கைச்சங்கிலி பற்றி பேசியதை மட்டும் ஓடவிட்டான். கைபேசியை தன்னை நோக்கி பிரதாப் வைத்து இருந்ததால், குரல்களை மட்டும் கேட்ட ரோஷன் பெரிதும் அதிர்ந்தாலும் சமாளித்துக் கொண்டு, “இது.. இது.. யாரோ எங்களைப் போலப் பேசி இருக்காங்க.. இல்ல.. ஏஐ வச்சு செய்து இருக்காங்க” என்றான்.
பிரதாப் கைபேசியைத் திருப்பி, இருவரும் முன்தினம் உணவகத்தில் பேசிய காணொளியை காட்டியபடி, “இதைக் காட்டியதும் காருண்யா எல்லா உண்மையையும் சொல்லிட்டா.. நீ தான் முதல் அக்கியூஸ்ட்.. நீ தான் கொலை செய்தனு வாக்குமூலமே கொடுத்திட்டா.” என்றான்.
“அய்யோ சார்! நான் எதுவும் பண்ணலை.. என்னை நம்புங்க சார்.. பிளான் போட்டதே அவ தான்.. அதை எக்ஸிகியூட் செய்ய அடியாள்கள் கூடப் போனது மட்டும் தான், நான்.”
“எக்ஸிகியூட் செய்தது நீ தானே! அப்போ, நீ தான் முதல் குற்றவாளி.”
“சார்! நாங்க போட்ட திட்டமே வேற.. ஜஸ்ட் மிரட்ட மட்டும் தான் காருண்யா பிளான் போட்டா...”
“அதான், அவளும் சொன்னா... அவ மிரட்டப் போட்ட திட்டத்தைக் கொலையா நீ மாத்தி இருக்க?”
“அய்யோ சார்! இல்லவே இல்லை. சத்தியமா நான் கொலை செய்யலை. நானும் மிரட்டுற எண்ணத்தில் மட்டும் தான் போனேன். ஆனா, நாங்க போனப்பவே அவங்க செத்துக் கிடந்தாங்க.”
“இதை என்னை நம்பச் சொல்றியா?”
“சார், சத்தியமா இதான் நடந்தது”
“அங்கே வீட்டில் தான், ப்ரேஸ்லெட்டைத் தொலைச்சியா?”
“இல்ல சார்.. நிஜமாவே சூதாட்டத்தில் தான் அதை இழந்தேன்.. நீங்க வேணா பெங்களூர் வந்து அந்த க்ளப்பில் விசாரிச்சுப் பாருங்க.. சிசிடிவி-யில் கூட இருக்கும்”
“ஹ்ம்ம்” என்றுவிட்டு பிரதாப் கிளம்ப,
“சார்.. சார்...” என்று கத்தினான்.
பிரதாப் அடுத்து காருண்யா இருக்கும் அறைக்குள் சென்றான்.
இவனைப் பார்த்ததும் அவள் பதற்றத்தை மறைக்க முயற்சித்தபடி, “திரும்ப எதுக்கு சார் வரச் சொன்னீங்க? நேத்தே எங்களுக்குத் தெரிந்த எல்லாத்தையும் சொல்லிட்டோமே! ரோஷன் எங்க?” என்று கேட்டாள்.
“ட்ரை பெட்டர்!”
“என்ன?”
“டென்ஷன் இல்லாத மாதிரி நடிக்க முயற்சிக்கிறதைச் சொல்றேன்”
“நான்.. ஒன்னும் நடிக்கலை”
“அப்போ, உங்க அப்பா அம்மாவை எதுக்கு கொலை செய்தீங்கனு சொல்லுங்க?”
“என்..ன?!” என்று அதிர்ந்தவள், பின் வரவழைத்த கோபக் குரலில், “என்ன சார் பேசுறீங்க? நான் ஏன் என்னோட பேரென்ட்ஸைக் கொல்லப் போறேன்?” என்று கத்தினாள்.
“அவரோட ரிடைர்மென்ட் பணத்துக்கும், பேங்க்கில் இருக்கும் பணத்திற்கும், வீட்டிற்காகவும்.. இருங்க இதைப் பார்த்துட்டுப் பதில் சொல்லுங்க” என்றபடி இவளிடமும் அந்தக் காணொளியைப் போட்டுக் காட்டினான்.
அவள் பேச்சற்று அமர்ந்து இருக்க,
“வீடியோவில் வாக்குமூலம் இருக்குது.. உன்னோட அப்பா சண்டை போடாம பணத்தைக் கொடுத்து இருந்தா, இந்த மாதிரி... ஐ மீன், கொலை செய்து இருக்க மாட்டீங்கனு சொல்லி இருக்க.. அண்ட் ரோஷனும், நீ தான் எல்லா பிளானும் போட்டனு உண்மையை ஒத்துக்கிட்டான்” என்றான்.
அவ்வளவு நேரம் அதிர்ச்சியில் உறைந்து இருந்தவள், அவனது இறுதி கூற்றில் ஆவேசமாக, “அந்த நாய் அப்படிச் சொன்னானா!! அவனால தான் நான் இப்போ இந்த நிலைமையில் இருக்கேன்.. நான் சும்மா மிரட்ட தான் பிளான் போட்டேன்.. அதை கொலையா மாத்தியது அவன் தான்! கொலையைச் செய்துட்டு, என் கிட்டயே செய்யலைனு நாடகம் ஆடுறான்.. இதுல உங்க கிட்ட என்னைக் கோர்த்து விடுறானா அந்த...” என்று சில கெட்ட வார்த்தைகளை உதிர்த்தாள்.
அமைதியாக வெளியேறிய பிரதாப், அடுத்துச் சென்றது ராமலிங்கம் இருந்த அறைக்கு.
“என்ன மகாபிரபு! எல்லாம் சௌகர்யமா இருக்கா?”
“ஹை கூலிங்ல ஏசி இருந்து இருந்தா நல்லா இருக்கும்.”
“ஜெயிலில் கொசுக்கடியில் என்ன செய்வீங்க மகாபிரபு!”
“அப்படி ஒரு நிலைமை வராது போலீஸு!”
“ஹ..ஹான்! உனக்குத் துணைக்கு மகாராஜா சக்கரபாணியும் வராராமே!”
வாய்விட்டுச் சிரித்தவன், “கனவு காணாத போலீஸு! அரெஸ்ட்னு நீ சொன்னதும், ஒரு நிமிஷம் யோசிக்காம ஓடப் பார்த்து, சிக்கிட்டேன்.. இப்பவும் ஒன்னுமில்ல, நான் நோகாம வெளிய போய்டுவேன்.. ஏன்னா, நான் எந்தத் தப்பும் செய்யலை” என்றான்.
“தப்பு செய்யாதவன், எதுக்குடா போஸ்ட்-மார்டம் ரிப்போர்ட்டை மாத்தச் சொல்லி மிரட்டின?”
“என்ன ரிப்போர்ட்? நான் ஏன் மாத்தச் சொல்லணும்? நிஜமா எனக்கு புரியல!”
“சுந்தரி யாருனே தெரியாதுனு சொல்லப் போறியா?”
“நீ எந்த சுந்தரியக் கேட்கிறன்னு தெரியல.. என்னோட செட்டப் பேரு சுந்தரி தான்.. அது கூட இப்போ தான் செத்துப் போச்சு.”
“அந்த சுந்தரியைத் தான் சொல்றேன்.. ரிப்போர்ட்டைத் தற்கொலைனு தரச் சொல்லி, நேத்து நைட்டு மிரட்டி இருக்க.”
“உனக்கு ஆளு கிடைக்கலைனா, என்னைத் தூக்கி உள்ள போடுவியா? எவன் மிரட்டினானோ, அவனைப் பிடிச்சுக் கேள்வி கேளு.” என்றவன் வரவழைத்த சிறு அதிர்வுடன், “அப்போ என்னோட சுந்தரி தற்கொலை செய்துக்கலயா? எவனோ கொன்னுட்டானா?” என்றான்.
“ஆஸ்கர் அவார்டு நடிப்பையே பார்த்து இருக்கிறேன்டா.. நேத்து டாக்டரை மிரட்டினவன், உன் பெயரைத் தான் சொல்லி இருக்கான்.”
“ஊரில் நான் மட்டும் தான் ராமலிங்கமா?”
“வீட்டுக்காக நீ சுந்தரி கிட்டச் சண்டை போட்டது, மிரட்டியதுனு எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்குது”
“இருக்கட்டும்.. நான் தான் கொலை செய்தேன்னு ஆதாரம் இருக்கா? இருக்காது! ஏன்னா, நான் தான் கொலை செய்யவே இல்லையே! அதுவும் நான் போய் என் செல்லத்தைக் கொல்லுவேனா? அபாண்டமா பேசாத போலீஸு”
“செல்வநாயகத்தை மிரட்டியதுக்கும் ஆதாரம் இருக்குது”
“திரும்பவும் அதையே தான் சொல்றேன் போலீஸு.. நான் மிரட்டிக் காரியத்தைச் சாதிக்கிறவன் தான்.. ஆனா, கொலை செய்றவன் இல்லை.. நான் யார் யாரையோ மிரட்டுற மாதிரி, நீ நூறு ஆதாரம் கூடக் கொண்டு வரலாம்.. ஆனா கொலை! வாய்ப்பில்ல ராஜா, வாய்ப்பே இல்ல..!”
“ரோஷன் கிட்ட, மதனகோபால் வீட்டை விற்கிறது பத்திப் பேசி இருக்க.. மூனு கொலையிலும் நீ தான் சம்பந்தப்பட்டு இருக்க.”
“பெருசா ஒரு வாரம்னு மணிரத்னம் ஸ்டைல்ல ப்ரெஸ் மீட்டில் சொல்லிட்டுப் போன!” என்று சீண்டலாகக் கூறியவன், பின் அதீத நக்கலுடன், “முடியலையா! அதான் என்னை இழுத்துவிட்டு முடிக்கப் பார்க்கிறியா?” என்றான்.
“நீ செய்யாததை ஒன்னும் நான் சொல்லலை”
“ஆமா, இந்த ரோஷன், மதனகோபால் எல்லாம் யாரு?”
“உன்னோட போன் ஹிஸ்டரி எடுத்தா, தெரிஞ்சிடும்.”
“தோ பாரு போலீஸு.. ஒரு நாளைக்கு எத்தனையோ போன் பேசுறேன்! அதில் பேரெல்லாம் சரியா ஞாபகம் இருக்காது.. இப்ப என்ன? மிஞ்சி மிஞ்சிப் போனா கேஸ் போடுவியா? அவ்ளோ தான! உன்னோட ஆசைக்கு போட்டுக்கோ..! நான் கோர்ட்டில் பார்த்துக்கிறேன்.”
பிரதாப் அவனை முறைத்துவிட்டு வெளியேறியதும், ராமலிங்கம் சுந்தரி இறந்த அன்று, சுந்தரியின் வீட்டில் நடந்ததை நினைத்துப் பார்த்தான்.
அன்று வீட்டைத் தன் பெயரிற்கு மாற்றுவதற்கான பத்திரத்தாளுடன் சென்று கையெழுத்துப் போடக் கூறி சுந்தரியை மிரட்டினான்.
இருவருக்கும் இடையே விவாதம் பெரிதாக, ஒரு கட்டத்தில் சுந்தரி காவல்துறையை அழைக்கப் போவதாகக் கூறி கைபேசியை எடுக்க, அதைப் பிடுங்கி தரையில் எறிந்து விடவும், அவள் இவனை அடிக்க ஆரம்பித்தாள்.
இவன் அதிகரித்த கோபத்துடன் அவளைத் தள்ளியதில், அவளது பின் தலை தேக்குக் கட்டிலின் முனையில் பலமாக இடித்தது.
தலையில் வலி அதிகமாக இருக்க, தலையை பிடித்தபடி மெல்ல எழுந்தாள். அவளிடம் சிறு தள்ளாட்டத்தைக் கண்டவன், “என்னாச்சு?” என்று வினவினான்.
அவளால் பதில் சொல்ல முடியவில்லை. உடனே, அது தான் சந்தர்ப்பம் என்று, “தலையில் ரொம்ப அடிபட்டு இருக்குது.. இப்படித் தான் எங்க கூட்டத்தில் ஒருத்தனுக்கு ஆச்சு.. ஒரு மணி நேரத்திலேயே செத்துட்டான்.. ஆனா டாக்டர் அரை மணி நேரத்தில் கொண்டு வந்து இருந்தா, பொழைக்க வச்சு இருக்கலாம்னு சொன்னார்.” என்றான்
“என்.ன.. காப்.பாத்.து ராமு”
“நீ இதுல சைன் போடு.. அடுத்த நிமிஷமே உன்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போறேன்.. இல்ல இப்படியே நீ சாக வேண்டியது தான். உதவிக்கு யாரும் வர மாட்டாங்க.. நான் வெளிய போனா தான் தேவகியும் வருவா” என்று பேசிப் பேசியே அவளுக்கு உயிர் பயம் காட்டியவன், அந்தப் பத்திரத்தில் கையெழுத்தும் வாங்கிவிட்டான்.
அடுத்து அவன் கிளம்பிப் போகப் போன போது, அவனது சட்டையை வலது கையால் பிடித்து இழுத்தவள், பத்திரத்தின் ஒரு முனையை இடது கையால் பற்றினாள்.
அவளிடம் இருந்த பத்திரத்தை வாங்க முடியாத கோபத்தில், கால்சட்டை பையில் எப்பொழுதும் வைத்திருக்கும் சிறிய கத்தியை வைத்து அவளது இடது கையில் மூன்று இடத்தில் ஆழமாக வெட்டினான். வலி தாங்க முடியாமல், அவள் பத்திரத்தில் இருந்து கையை எடுத்து இருந்தாலும், அதன் சிறு பகுதியைக் கிழித்து இருந்தாள். அது கீழே விழுந்ததை அவனும் கவனிக்கவில்லை. அவளை மெத்தையில் படுக்க வைத்த போது, அவனது கால் பட்டு அந்தக் காகிதம் சற்று நகர்ந்தும் இருந்தது.
எப்படி இந்தக் கொலையில் இருந்து தப்பிப்பது என்று யோசித்து, அவசர அவசரமாகச் செயல் பட்டான். ரெட்டைக் கொலைகள் நினைவிற்கு வரவும், அவளது கண்ணையும் வாயையும் கட்டிவிட்டு, சில பொருள்களைச் சிதறவிட்டுவிட்டு, வீட்டைவிட்டு கிளம்பி இருந்தான். செல்லும் வழியில் தேவகியையும் மிரட்டிவிட்டு, சென்றிருந்தான்.
சக்கரபாணி வீட்டிற்குச் சென்று பத்திரத்தைக் கொடுத்த போது தான், அது கிழிந்து இருந்ததைப் பார்த்தான்.
நடந்ததை இவன் கூறவும், சக்கரபாணி திட்ட, அப்பொழுதும் இவன் அசராமல், “சின்ன துண்டு தான! ஒரு பிரச்சனையும் வராது.. மீறி வந்தா, நீங்க பார்த்துக்க மாட்டீங்களா? சும்மா இதைப் பத்தி யோசிக்காம, இந்தக் கையெழுத்தை வச்சு புதுசா ஒரு பத்திரத்தை ரெடி பண்ணி, நேத்து தேதியில ரெஜிஸ்டர் பண்ண ஏற்பாடு செய்யுங்க.” என்றுவிட்டு சென்று விட்டான்.
திலீப், “என்ன சார், இவனை பிரேக் பண்ணவே முடியலை!” என்று கூற,
பிரதாப், “எதிர்பார்த்தது தான்.. சாரங்கன் கிட்ட காலையிலேயே பேசிட்டேன்.. சிவா கொண்டு போயிருக்க ஹேர்-சாம்பிள் டி.என்.ஏ ரிப்போர்ட், நாளைக்கு ஈவ்னிங் ஆர் நைட் தரப் பார்க்கிறேன்னு சொல்லி இருக்கார்.. எப்படியும் அதில் சிக்கிடுவான். தண்ணி கிளாஸில் இருந்து எடுத்த இவனோட பிங்கர்-பிரிண்ட் கூட ரோஷன், காருண்யா பிங்கர்-பிரிண்ட்ஸ், சிவா கிட்ட கொடுத்து விட்டீங்க தானே!” என்றான்.
“ஆமா சார்.. அதையும் சேர்த்துத் தான் கொண்டு போய் இருக்கார்.. இப்போ ரிட்டர்ன் ஆகிட்டு இருப்பார்.”
“ஹ்ம்ம்.. நீங்க செக் பண்ண சிசிடிவி புட்டேஜில் எனி லீட்?”
“செல்வநாயகம் வீட்டு ஜன்னல் பக்கம், பெருசா எந்த லீடும் கிடைக்கலை சார்.. மதனகோபால் தெரு சுத்தி கேதர் செய்த சிசிடிவி புட்டேஜ் பார்த்தவரை, லீட் எதுவும் இல்லை.. இன்னும் ரெண்டு சிசிடிவி புட்டேஜ் கலெக்ட் பண்ணனும்.. சிவா வரும் போது வாங்கிட்டு வரேன்னு சொல்லி இருக்கார்.”
“ஓகே.. நீங்க அதைப் பாருங்க.. நான் கமிஷ்னர் சாரைப் பார்த்துட்டு வரேன்.” என்று கூறி கிளம்பினான்.
*******
ஆணையர் அலுவலகம்:
இதுவரை சேகரித்த அனைத்தையும் கூறி முடித்தவன், “எல்லாக் கொலையிலும் ராமலிங்கம் அடிபட்டாலும், சுந்தரியைக் கொன்னது மட்டும் தான் அவன்னு என் இன்ஸ்டின்ட் சொல்லுது சார்.. சூப்பர் மார்க்கெட் புட்டேஜில் கிடைத்த பிளேக் கோட் உருவம், இவனோட ஒத்துப் போறது போலத் தெரிந்தாலும், பாடி லாங்குவேஜ்!
அந்த உருவத்திடம் அப்படி ஒரு நிதானம் இருந்தது சார்..! இவன் கிட்ட அசாத்திய தெனாவெட்டு தான் இருக்கும்.
மதனகோபால், காயத்ரி கொலையில் ரோஷன் காருண்யா மேல சந்தேகம் இருக்குது தான்.” என்றான்.
சில நொடிகள் யோசித்த ஆணையர், “ஒன்னு செய்யலாம்.. எல்லாக் கொலையும் செய்த கில்லர் ராமலிங்கம்னு அனௌன்ஸ் செய்திடுவோம்...”
“சார்! என்ன இது?”
“இரு மேன்.. நான் முடிச்சுக்கிறேன்.. சுந்தரியை நிஜமாவே அவன் தான் கொலை செய்து இருப்பான்னு நீ நம்புற தானே!”
“சென்ட் பெர்சென்ட் சார்.. ஆனா அதுக்காக..”
“இரு.. இரு.. நாம ஒன்னும் அப்பாவியையோ, உத்தமனையோ கொலைகாரன்னு பொய்யா காட்டப் போறது இல்லையே! அவன் ஒரு கொலைகாரன்.. அதுவும் நீ ஹன்டில் செய்ற கேஸில் தான், ஒரு கொலையைச் செய்து இருக்கான்.. சாரங்கன் ரிப்போர்ட் தந்த அப்புறம் அனௌன்ஸ் பண்ணலாம்..
நாம அப்படியே விடப் போறது இல்லை.. நீ பிரஷர் இல்லாம அந்த ரெட்டைக் கொலைகளை செய்தது யாருனு கண்டு பிடி.. நமக்கு எக்ஸ்ட்ரா டைம் கிடைக்குது, அப்படி எடுத்துக்கோ..
அண்ட் முக்கியமா, அஸ் யூஷுவல் சொல்ற கேஸ் சிபிஐ-க்கு போகும் என்ற பிரஷரும் உனக்கு இருக்காது.”
“ஆனா சார்.. அதுக்குள்ள இன்னொரு கொலை நடந்தா?”
“அதுக்கு முன்னாடி கண்டு பிடி மேன்.. உன் இன்வெஸ்டிகேஷன் பாஸ்ட்டா தான் இருக்கணும். இப்பவும் நாம கில்லரை சீக்கிரம் கண்டு பிடிக்கிற சிட்டுவேஷனில் தான் இருக்கிறோம்.. ஆனா என்ன? பொலிடிகல் அண்ட் மீடியா பிரஷர் இருக்காது.
அந்த கௌன்சிலரை உள்ளே இழுத்து விடு.. அப்போ தான் இரண்டு பேரும் அமைதியா உள்ளே கிடப்பான்க.. நாம நம்ம வேலையைப் பார்க்கலாம்.”
அவன் அரை மனதுடன், “ஓகே சார்” என்றபோது, அவனது கைபேசி அலறியது.
அதை எடுத்துப் பேசியவன், மறுமுனையில் கூறப்பட்ட செய்தியில், “வாட்!” என்றான்.
பின், “சரி, அந்த டிடேல்ஸ் கலெக்ட் செய்துட்டு ஸ்டேஷன் வாங்க.. நானும் வரேன். நான் இப்போ கமிஷ்னர் ஆபீஸில் இருக்கிறேன்.. நேரில் பேசிக்கலாம்.” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.
ஆணையர் அவனைக் கேள்வியாய் பார்க்க, “நாம இப்போ புது பிரச்சனையில் மாட்ட வாய்ப்பு இருக்குது சார்.” என்றான்.
“என்ன?”
“சுந்தரி கொலை நடந்த அன்னைக்கு, நிவேதிதா நகரில் ஒரு டாக்டர் இறந்து இருக்கார்.. சூசைடுன்னு கேஸ் க்ளோஸ் செஞ்சு இருக்காங்க.. அந்த டீமில் இருந்த எஸ்.ஐ திவாகர், சிவா பிரெண்ட். ரெண்டு பேரும் இன்னைக்கு மீட் பண்ணப்ப, திவாகர், அந்த கேஸ் பத்தி பேசியதும், சிவாக்கு சந்தேகம் வந்து இருக்குது.. ஏன்னா...
ரெட்டை கொலைகள் மாதிரியே, அந்த டாக்டரோட கையிலும், ரேடியல் அல்னர் நெர்வ் கட் ஆகி இருந்திருக்குது.. வாயில் டேப் ஒட்டப்பட்டு இருந்திருக்குது.. ஆனா, டாக்டரோட ரெண்டு கையிலும் நெர்வ் கட் ஆகி இருந்ததாம்.” என்றான்.
ஆணையர் தலையில் கை வைக்காத குறையுடன், அவனைப் பார்த்தார்.
***
கதைக்கு கருத்துக்கள் தெரிவித்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றிகள்.
நான் முன்பே சொன்னது போல ஒன்று மற்றும் ஐந்தாவது எபிக்கு மட்டுமே சரியான பதில் வந்துள்ளது. மீதி அத்தியாய எழுத்தாளர்களை கண்டுபிடிக்காமல் இருப்பது வருத்தமே!
எழுத்தாளர் பற்றிய உங்கள் கணிப்புகள் மீண்டும் இந்தத் தளத்தில் உள்ளவர்கள் பற்றியே சுற்றி வருகிறது. இன்னும் கொஞ்சம் முயற்சிக்கவும்.
இன்னும் சிலரையாவது கண்டுபிடிப்பீர்கள் என நம்புகிறோம்.
தொடர்ந்து உங்கள் கருத்துக்களையும், கணிப்பையும் தெரிந்துகொள்ள காத்திருக்கிறோம்.

Previous thread
Next thread