காதலின் ரீங்காரம்..!
எழுத்தாளர்: எழிலன்பு
(அத்தியாயம் - 7)
எதுவும் சுலபமாக கிடைத்து விட்டால் அதனோட அருமை தெரியாது தானே, அதான் இருவருக்குமே தன் துணையின் அருமை பெருமைகளை புரிய வைக்க காலம் காத்திருக்கிறதோ என்னவோ...?
அட ராமா..! மொத்தமா சாய்ச்சுப் புட்டாளே, சாய்ச்சுப் புட்டாளே !
இப்படியா நடு சபையில மானத்தை வாங்குவாள்...?
ஆனால், அவளுக்கு ஒண்ணு புரியலை, அவ மயூரனை மட்டும் அவமானப் படுத்தலை, தன்னைத்தானே அவமானப் படுத்திக்கிட்டாள். இவ மயூரனோட போகலைன்னு சொல்லி பிறந்த வீட்டோட உட்கார்ந்திட்டாள், சமுகம் இவளை திரும்பி பார்க்கும் பக்கமெல்லாம் வாழவெட்டின்னு சொல்லி இழிவு படுத்துமே, அதற்கென்ன பதில் சொல்லுவாளாம்...? இதுக்கு கல்யாணம் பண்ணாமலே கூட இருந்திருக்கலாம். கழுத்தில் அவன் கட்டிய தாலியை சுமந்துக் கொண்டு, அவனை யே அவமானப்படுத்துவதைப் போல நான் உன்னோட வாழ வரவில்லை என்று சொன்னால் ஊரும் உலகமும் அவளை சும்மா விட்டு விடுமா என்ன ?
இல்லை அவமானங்களும் வெகுமானங்களும் அவனோடு பிணைக்கப்பட்ட அவளுக்கு மட்டும் இல்லையா என்ன ? பேசும் வார்த்தைகளாலேயே கொன்று குழி போட்டு மூடி விடும் இந்த உலகம். அப்பொழுது தான் வாழ்க்கையின் தாத்பரியமே புரியும் போலிருக்கு மதுமதிக்கு.



CRVS (or) CRVS 2797