• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

5 - உறையுள் உறையும் உதிரம்

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 21
  • Views Views 2K
Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
804
Reaction score
4,614
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
உறையுள் உறையும் உதிரம்
View attachment 663
அத்தியாயம் 5

காவல் நிலையம்…

பிரதாப் அவன் முன்னிருந்த இஸ்திரி செய்பவனான நாகேந்திரனைப் பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தான்.

பிரதாப்பின் அருகே அமர்ந்திருந்த திலீப்போ, “எதுக்கு எங்களைப் பார்த்ததும் பயந்து ஓடின?” என்று வினவ, “அது வந்து சார்…” என்று இழுத்த நாகேந்திரன், பிரதாப்பின் பார்வை வீரியத்தில் எச்சிலை விழுங்கியபடி, “என்னைச் சந்தேகப்பட்டுடுவீங்களோன்னு பயத்துலதான் சார் ஓடினேன்.” என்றான்.

“சோ, நாங்க சந்தேகப்படுற மாதிரி ஏதோ செஞ்சிருக்க, ரைட்?” என்று மேசையைத் தட்டியபடி பிரதாப் வினவ, தலையைக் குனிந்து கொண்டான் நாகேந்திரன்.

“நல்ல விதமா கேட்கும்போதே பதிலைச் சொல்றியா, இல்ல போலீஸ் விசாரணை எப்படி இருக்கும்னு டிரையல் காட்டணுமா?” என்று பிரதாப் பல்லைக் கடித்துக்கொண்டு கேட்க,

“நானே சொல்லிடுறேன் சார். ஆனா, நான் அந்தக் கொலையைச் செய்யல.” என்று நாகேந்திரன் மறுப்பு தெரிவிக்க, “எந்தக் கொலை?” என்று உடனே கேட்டான் பிரதாப்.

“அது… சுந்தரியோட கொலை…” என்று நாகேந்திரன் தயக்கத்துடன் கூற, “கொலையா? அப்போ சுந்தரியோடது தற்கொலை இல்லையா?” என்று அவனை மடக்கினான் பிரதாப்.

அதற்கு நாகேந்திரன் திருதிருவென்று விழிக்க, “சரி நீ சொல்ல வந்ததைச் சொல்லு.” என்றான் பிரதாப்.

“நான் சுந்தரியோட வீட்டை வேவு பார்க்கத்தான் போனேன்.” என்ற உண்மையை ஒப்புக்கொண்டான் நாகேந்திரன்.

“யாருக்காக, எதுக்காக வேவு பார்த்த?” என்று திலீப் வினவ, “அது…” என்று தயங்கியவன், பின்னர் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, “சுந்தரியோட முன்னாள் கணவர் ராஜசேகர் சொல்லித்தான் அங்க போனேன்.” என்று சொல்லி விட்டான்.

பிரதாப்பிற்கு ஏற்கனவே ராஜசேகர் மீது சந்தேகம் இருந்தது. சுந்தரியின் வீட்டிற்குச் சென்று விசாரித்தபோது அவர்களின் மகள், தந்தையை ஏறெடுத்துப் பார்க்காதபோதே உண்டான சந்தேகம் அது.

“சோ, சுந்தரியைக் கொலை செய்ய, ராஜசேகருக்குத் துணையா இருந்திருக்க?” என்று பிரதாப் கேட்க, “சார், நான் துணையா எல்லாம் இல்ல. அதோட, அவங்களைக் கொலை செய்யுறது அவரோட திட்டமும் இல்ல.” என்று பயத்துடன் மொழிந்தான் நாகேந்திரன்.

“ப்ச், ஒவ்வொரு கேள்வியா கேட்டாதான் சொல்லுவியா? முழுசா சொல்லி முடி.” என்று திலீப் கூற, ஒரு பெருமூச்சுடன், “சார், சுந்தரியை அடிக்கடி யாரோ பார்க்க வரதா ராஜசேகருக்கு தகவல் வந்துச்சு. அதுக்காகத்தான் என்னை வேவு பார்க்கச் சொன்னாரு.” என்றான் நாகேந்திரன்.

“சோ, அந்த நபரைப் பத்தின தகவல் தெரிஞ்சுதா?” என்று பிரதாப் எதையோ சிந்தித்தபடி கேட்க, “சார், அந்தாளு பேரு ராமலிங்கம். அவனுக்கு ஏற்கனவே ஒரு குடும்பம் இருக்கு. இந்த ஏரியா கவுன்சிலருக்கு சொந்தக்காரன். சுந்தரியோட எப்படி பழக்கம் உண்டாச்சுன்னு தெரியல. ரகசியமாதான் ரெண்டு பேரும் சந்திச்சுப்பாங்க. அவன் வரப்போ எல்லாம் வீட்டுல யாரும் இல்லாத மாதிரி பார்த்துப்பாங்க சுந்தரி.” என்று தான் சேகரித்த தகவல்களை எல்லாம் கூறினான் நாகேந்திரன்.

அனைத்தையும் கவனமாக மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்ட பிரதாப், “அவங்க பொண்ணுக்கு இது தெரியாதா?” என்று சந்தேகத்துடன் கேட்க, “அதுதான் சார் கொடுமையே! அந்தப் பொண்ணு, அவங்க அப்பாவை வில்லன் மாதிரி பார்க்குது. ஆனா, வில்லியே அவங்க அம்மாதான். அது அந்தப் பொண்ணுக்குத் தெரியாது.” என்று தோளைக் குலுக்கினான் நாகேந்திரன்.

“அப்போ, சுந்தரி கொலை செய்யப்பட்ட நாளன்னைக்கும் ராமலிங்கம் அங்க வந்தாரா?” என்று திலீப் ஆர்வத்துடன் கேட்க, “ஆமா சார். அதுக்காகத்தான் அந்த வீட்டுல வேலை செய்யுற தேவகியை வெளிய அனுப்புனாங்க.” என்றான்.

“சோ, உன்னைப் பொறுத்தவரை, சுந்தரி கொலை செய்யப்பட்டிருக்காங்க. அதுக்குக் காரணம் ராமலிங்கம், சரியா?” என்று திலீப் மீண்டும் உறுதிபடுத்திக் கொள்ளக் கேட்டான். பிரதாப்போ அவனின் யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

“அது எனக்கு சரியா தெரியல சார். ராமலிங்கம் வந்த கொஞ்ச நேரத்துல, அவங்க ரெண்டு பேரும் சண்டை போடுற மாதிரி சத்தம் கேட்டுச்சு. அதே நேரத்துல, என் வீட்டுலயிருந்து அவசரமா ஃபோன் கால் வந்ததால, நான் அங்கயிருந்து கிளம்பிட்டேன்.” என்றான் நாகேந்திரன்.

ஏதோ கேட்க வந்த திலீப்பைப் பார்வையால் தடுத்த பிரதாப், “ராமலிங்கம் அன்னைக்கு என்ன கலர் டிரெஸ் போட்டிருந்தாரு?” என்று வினவ,
சற்று யோசித்த நாகேந்திரன், “கருப்பு கலர்ல ரெயின்கோட் மாதிரி போட்டிருந்தாரு சார்.” என்றான்.

“ம்ம்ம், நீ சொல்றது உண்மையா இருந்தா ஓகே. ஏதாவது தப்பா சொல்லியிருந்தா, பப்லிக் நியூசன்ஸ்னு கேஸ் ஃபைல் பண்ணிடுவேன். எங்ககிட்ட சொல்லாம எங்கயும் போகக்கூடாது, புரியுதா? வெளிய இருக்க கான்ஸ்டேபிள் கிட்ட உன்னோட அட்ரெஸ், ஃபோன் நம்பர் எல்லாம் குடுத்துட்டுப் போ.” என்றான் பிரதாப்.

நாகேந்திரேனோ எல்லாப் பக்கமும் தலையை அசைத்துவிட்டு சென்றுவிட்டான்.

“என்ன சார், அதுக்குள்ள அனுப்பிட்டீங்க?” என்று திலீப் வினவ, “அவன் சொல்றது உண்மைதான் திலீப்.” என்ற பிரதாப், அவன் முன்னிருந்த மடிக்கணினியை அவனிடம் காட்டினான்.

அது சுந்தரியின் வீட்டிற்கு மூன்று வீடுகள் தள்ளியிருந்த வீட்டிலிருந்து கிடைத்த சிசிடிவி காட்சி.

அதில் யாரோ ஒருவன் பைக்கில் அந்த வீட்டைக் கடந்து செல்வதைச் சுட்டிக்காட்டிய பிரதாப், “இவன்தான் ராமலிங்கமா இருக்கணும்.” என்றவன், அந்தக் காணொளியை ஓட்டிக்காட்ட, அதில் சிறிது நேரத்தில் தேவகி செல்வதும், அவருக்குப் பின்னே நாகேந்திரன் செல்வதும் பதிவாகியிருந்தது.

இவையனைத்தும் ஏழு மணியிலிருந்து ஏழேகால் மணிக்குள் நடந்து முடிந்திருந்தன.

மீண்டும் சில நிமிடங்கள் காணொளியை ஓட்டிய பிரதாப், சரியாக ஏழு முப்பத்திமூன்று மணிக்கு ராமலிங்கம் பைக்கில் அந்த வீட்டைக் கடந்து செல்வதையும், ஏழு முப்பத்தியைந்து மணிக்கு தேவகி மீண்டும் சுந்தரியின் வீட்டை நோக்கிச் செல்வதையும் காட்டினான்.

அதைக் கண்ட திலீப்பின் விழிகள் விரிய, “சார், அப்போ ராமலிங்கம்தான் கில்லரா?” என்று வினவினான்.

“இந்த வீடியோவை வச்சு சந்தேகப்பட மட்டும்தான் முடியும் திலீப். இது கொலைன்னே இன்னும் ப்ரூவ்வாகல. சுந்தரியோட போஸ்டமார்ட்டம் ரிப்போர்ட் கிடைச்சா, கம்பேர் பண்ணி பார்க்கலாம். ராமலிங்கத்தை ஸ்டேஷன் வரச்சொல்லி உடனே இன்ஃபார்ம் பண்ணுங்க, விசாரிப்போம்.” என்ற பிரதாப், “சுந்தரியோட வீட்டுக்குப் போறதுக்கு இதுதான் ஒரே வழியா?” என்று புருவம் சுருக்கி வினவினான்.

“ஆமா சார், இன்னொரு பக்கம் முட்டுச்சந்து. சோ, சுந்தரியோட வீட்டுக்குப் போகணும்னா, இந்த சிசிடிவி இருக்க வீட்டைக் கடந்துதான் போகணும்.” என்று உறுதியாகக் கூறினான் திலீப்.

சற்று யோசித்த பிரதாப், “எதுக்கும் நம்ம கான்ஸ்டேபிள்ஸ்ல ரெண்டு பேரை, நாகேந்திரனையும் ராஜசேகரையும் மஃப்டில ஃபாலோ பண்ணச் சொல்லுங்க.” என்றான்.

மேலும், “இப்போ கிடைச்சிருக்க புது லீடை வச்சு, ராஜசேஜரையும் தேவகியையும் விசாரிக்கணும்.” என்று பிரதாப் சொல்ல, “சார், தேவகிக்கு உடம்பு முடியலன்னு சொன்னாங்களே…” என்றான்.

“அதுக்காக நம்ம வேலையை தள்ளிப்போட முடியாதே திலீப்.” என்று தலையைக் கோதிய பிரதாப், “சரி, நாம நேரடியா போயே விசாரிச்சுட்டு வந்துடலாம். ராஜசேகரை மட்டும் ஸ்டேஷன் வரச் சொல்லுங்க.” என்றான்.

இப்போதும் அவனின் பார்வை அவனிடமிருந்த கோப்புகளில்தான் இருந்தது.

“முதல் கொலையைப் பத்தி போலீஸுக்குத் தகவல் சொன்னவரை விசாரிச்சீங்கதான? பைக் ஷோரூம்ல வேலை செய்யுறதா சொன்னீங்களே… அந்த ரிப்போர்ட் ஏன் இந்த ஃபைல்ல இல்ல திலீப்?” என்று பிரதாப் கேட்க, “சாரி சார்.” என்றான் திலீப்.

“எனக்கு சாரி வேண்டாம் திலீப். ஃபைலை ஒழுங்கா மெயின்டெயின் பண்ணுங்க. இல்லன்னா, முக்கியமான க்ளூ நம்ம கண்ணுக்குத் தெரியாம கூட போகலாம்.” என்ற பிரதாப், அதற்கு திலீப்பின் பதிலை எல்லாம் எதிர்பார்க்கவில்லை.

“ஆமா, முதல் விக்டிமோட மகனை பார்க்கணும்னு சொன்னேனே… எவ்ளோ நாளாச்சு… இன்னுமா அவர் வரல?” என்று பிரதாப் வினவ, “சார், நாங்க அவரைக் கான்டேக்ட் செஞ்சோம். ஆனா, முக்கியமான வேலை காரணமா அவர் உடனே அப்ராட் போயிட்டதா சொன்னாரு.” என்றான் திலீப்.

“எல்லாருக்கும் வேலை இருக்கத்தான் செய்யும் திலீப். அவர் வேலையெல்லாம் முடிச்சு வரவரைக்கும் நம்ம வெயிட் பண்ண முடியுமா? ஒரு வாரத்துல கேஸ் முடிக்குறோம்னு சொல்லியிருக்கோம், ஞாபகம் இருக்குல்ல?” என்று பிரதாப் சற்றுக் காட்டமாகக் கேட்க, “எஸ் சார்.” என்று தலை குனிந்தான் திலீப்.

தன் கோபத்தை அடக்கிய பிரதாப், “அட்லீஸ்ட் வீடியோ கால்ல பேச சொல்லுங்க. இதுக்கு மேல டைம் எல்லாம் கொடுக்க முடியாது. அப்படி வீடியோ கால்ல கூட பேச முடியாதுன்னு சொன்னா, சஸ்பெக்ட் லிஸ்ட்ல முதல் பெயரா அவரோடதுதான் இருக்கும்னு சேர்த்து சொல்லுங்க.” என்றான்.

அப்போது அனுமதி கேட்டு உள்ளே நுழைந்த காவலன் ஒருவன், “சார், ரெண்டாவதா கொலையானவங்களோட பொண்ணும் மருமகனும் வந்திருக்காங்க.” என்று கூற, “ஓகே, அவங்களை வெயிட் பண்ணச் சொல்லுங்க.” என்ற பிரதாப், மீண்டும் கோப்புகளில் கவனத்தைச் செலுத்தி, எதையாவது தவற விட்டுவிட்டானா என்பதை உறுதி செய்து கொண்டான்.

பின்பு, இரண்டாவதாக கொலை செய்யப்பட்டவர்களின் மகள் காருண்யாவையும், மருமகன் ரோஷனையும் காணச் சென்றான்.

பிரதாப் கொடுத்த வேலைகளை தனக்கு கீழிருப்பவர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டு, அவனைப் பின்தொடர்ந்தான் திலீப்.

இரு தரப்பினரும் அறிமுகங்களை முடித்ததும், “உங்களுக்கு யாரு மேலயாவது சந்தேகம் இருக்கா?” என்ற கேள்வியின் மூலம் விசாரணையைத் தொடங்கி இருந்தான் பிரதாப்.

“நாங்க என் பேரண்ட்ஸோட அவ்ளோ கிளோஸ் எல்லாம் இல்ல சார்.” என்று காருண்யா கூற, “இது உங்க பேரண்ட்ஸ் வீட்டுல இருந்து எடுத்ததுதான். நீங்க கிளோஸா இல்லன்னு சொல்றீங்க. ஆனா, இதைப் பார்த்தா அப்படி தெரியலையே.” என்று அவர்களின் பெற்றோரின் வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட குடும்ப புகைப்படத்தைக் காட்டினான் பிரதாப்.

ரோஷனை ஒரு பார்வை பார்த்த காருண்யாவோ, “அது… போன மாசம்தான் அப்பாவையும் அம்மாவையும் பார்க்க வந்தோம். அப்போ எடுத்த ஃபோட்டோ இது.” என்றவள், உடனே, “இப்போதான் பேச ஆரம்பிச்சோம் சார். அதனால, ரொம்ப எல்லாம் எனக்கு தெரியாது.” என்று சேர்த்துக் கூறினாள்.

“சரி, அதுதான் பேச ஆரம்பிச்சுட்டீங்களே, அப்புறம் எதுக்கு இறுதி காரியங்களை வேகவேகமா முடிச்சிட்டு கிளம்புனீங்க?” என்று அடுத்தக் கேள்வியை பிரதாப் வினவ,

“சார், எங்க பொண்ணுக்கு ஃபிட்ஸ் வந்து ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ண நேரம் அது. திடீர்னு அப்பாவும் அம்மாவும் இறந்துட்டாங்கன்னு கால் வந்துச்சு. ஒருபக்கம் என் பொண்ணு, இன்னொரு பக்கம் என்னைப் பெத்தவங்கன்னு அல்லாடிட்டோம் சார். இப்போ கூட, பொண்ணுக்குத் துணையா என் மாமியாரை இருக்க வச்சுட்டு வந்திருக்கோம். எங்க சைடும் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க.” என்றாள்.

“ஓகே, உங்களுக்கு வேற ஏதாவது தோணுச்சுன்னா எங்களைக் கான்டேக்ட் பண்ணுங்க. சின்ன விஷயமா இருந்தாலும் கூட… அதோட, இந்தக் கேஸ் முடியுற வரை, நீங்க எங்கப் போறதா இருந்தாலும், எங்ககிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டுதான் போகணும்.” என்றான் பிரதாப்.

பின்னர், குழந்தையின் நலனைப் பற்றியெல்லாம் விசாரித்துவிட்டு, வந்ததிலிருந்து பேசாமல் அமைதியாக இருந்த ரோஷனைக் கண்ட பிரதாப், அவன் கரத்திலிருந்த பிரேஸ்லெட்டை பார்த்து, “அட, இந்த டிசைன் நல்லா இருக்கே. புது மாடலா? எங்க வாங்குனீங்க?” என்று சாதாரணமாகக் கேட்பது போல கேட்டான்.

ரோஷனை முந்திக்கொண்ட காருண்யாவோ, “இது… என் அப்பா அவருக்குப் போட்டது.” என்றாள்.

ரோஷனின் பதற்றத்தைக் கவனித்துக் கொண்டே, “ஓஹ், டிசைன் நல்லா இருக்கு. ஒருமுறை நான் அதை பார்க்கலாமா?” என்று பிரதாப் கேட்க, ரோஷனும் அதைக் கழற்றிக் கொடுக்க, 360 டிகிரி கோணத்தில் அதைப் படம்பிடித்துக் கொண்டவன், “புதுசு மாதிரி அப்படியே மெயின்டெயின் பண்றீங்க.” என்று பாராட்ட, வியர்வையை துடைத்துக் கொண்டே அவஸ்தையாக சிரித்தான் ரோஷன்.

பின்னர், இருவருக்கும் விடைகொடுத்த பிரதாப் திலீப்பிடம் புகைப்படத்தைக் காட்டி, “பிரேஸ்லெட் சீல் வச்சு எங்க பர்சேஸ் பண்ணியிருக்காங்கன்னு கண்டுபிடிக்கச் சொல்லுங்க.” என்றவன், ஏதோ யோசித்தவனாக,

“காருண்யா, ரோஷன் ரெண்டு பேருக்கிட்டயும் ஏதோ பதட்டம் தெரியுது. ரோஷன் பதில் சொல்றதுக்கு முன்னாடி காருண்யா முந்திக்கிட்டு பதில் சொல்றாங்க. ஏதோ சரியில்ல. காருண்யா, ரோஷன் ரெண்டு பேரோட ஃபோன் ரெக்கார்ட்ஸ் செக் பண்ணுங்க. கொலை நடந்த நேரத்துல, அவங்களோட மொபைல் நெட்ஒர்க் எந்த டவர்ல காட்டுதுன்னு பார்க்கச் சொல்லுங்க.” என்றும் கூறினான்.

“ஓகே சார். தேவகியை அவங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்க ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்காங்களாம்.” என்று திலீப் கூற, “எனித்திங் சீரியஸ்?” என்று புருவம் சுருக்கி விசாரித்தான் பிரதாப்.

“இல்ல சார். பிரஷர் அதிகமாகி மயங்கி விழுந்துட்டாங்களாம். இப்போ முழிச்சுட்டாங்க போல. டிரிப்ஸ் முடிஞ்சதும் டிஸ்சார்ஜ் பண்ணிடுவங்களாம்.” என்ற திலீப், “ஹாஸ்பிட்டலுக்கே விசாரிக்கப் போகலாமா சார்?” என்று கேட்க, அதற்கு ஆமோதித்தவனாக, அலைபேசியை கையில் எடுத்துக்கொண்டு நடந்தான் பிரதாப்.

அப்போது அவர்களிடம் வந்த எஸ்.ஐ சிவா, “சார், ராமலிங்கம் இப்போ ஊர்ல இல்ல. விசாரிச்சவரை அவன் எங்கப் போயிருக்கான்னு தெரியலன்னு சொல்றாங்க.” என்று கூற, “குவிக் அப்டேட் கொடுத்ததுக்கு தேங்க்ஸ் சிவா. அவன் ஃபோனை ட்ரேஸ் பண்ணுங்க. நாளைக்குள்ள அவன் இருக்க இடம் நமக்குத் தெரியணும்.” என்ற பிரதாப், “அவனைப் பத்தி வேற ஏதாவது தெரிஞ்சுதா?” என்று வெளிவாசலை நோக்கி நடந்து கொண்டே வினவினான்.

“சார், அவன் வட்டிக்கு விடுற தொழிலை செய்யுறான். ஆள் கொஞ்சம் மோசம்தான்னு சொல்றாங்க. பணத்துக்காக என்ன வேணும்னாலும் செய்வானாம். போன வருஷம் நடந்த ஒரு கொலைல, அவனோட பெயர் அடிபட்டுச்சு… ஆனா…” என்று சிவா இழுக்க, “கவுன்சிலருக்கு அவ்ளோ இன்ஃப்ளூயன்ஸா என்ன?” என்ற பிரதாப், “குட் ஜாப் சிவா. தொடர்ந்து அவனை டிரேஸ் பண்ணுங்க.” என்று காவல் வாகனத்தில் ஏறிக்கொள்ள, திலீப்பே வாகனத்தை ஓட்டினான்.

அந்தப் பயணம் மௌனமாக தொடர, இரு காவலர்களும் அவரவரின் சிந்தனையில் மூழ்கியிருந்தனர்.

வாகனம் குட்வில் ட்யூஷன் சென்ட்டரைக் கடக்கும் போதுதான், நைனிகா அழைத்தது ஞாபகம் வந்தது பிரதாப்பிற்கு.

நாகேந்திரனை பிடிப்பதில் தீவிரமாக இருந்ததால், அவளின் அழைப்பை அப்போது ஏற்க முடியவில்லை. அதன்பிறகு, வேலைகள் வரிசைக்கட்டி நிற்க, அவளின் நினைவு சுத்தமாக இல்லை என்றுதான் கூற வேண்டும்.

பிரதாப் நைனிகாவைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே, வாகனம் மருத்துவமனையின் முன்பு நின்றது.

தேவகி எங்கிருக்கிறார் என்பதை விசாரித்து, இருவரும் அங்கு சென்றனர்.

நல விசாரிப்புகள் முடிந்த பின்னர், “ராமலிங்கத்தை உங்களுக்குத் தெரியுமா தேவகி?” என்று சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தான் பிரதாப்.

உடல்நிலை குறைபாட்டால் சோர்ந்திருந்த தேவகியின் முகம் பயத்தில் வெளிறிப்போக, “தேவகி, உண்மை தெரிஞ்சுதான் உங்களை விசாரிக்க வந்திருக்கோம். இதுக்கு மேலயும் மறைக்கிறது, உங்களுக்கு நல்லதில்ல.” என்று எச்சரித்தான் திலீப்.

எச்சிலை விழுங்கியவாறே, “சார்… எப்படி சார் சொல்றது? ரொம்ப பெரிய இடம் சார்.” என்று தயங்க, “இங்கப் பாருங்க தேவகி, குற்றவாளியை மறைக்குறது, அவன் குற்றத்துக்கு துணை போறதுக்கு சமம்.” என்று பிரதாப் நிதானமாக கூறினாலும், அவனின் பார்வை தேவகியை கூறுபோடுவது போலிருந்தது.

அதில் அவருக்குத் தெரிந்த உண்மையைக் கூற ஆரம்பித்தார் தேவகி.

“சார், ராமலிங்கத்துக்கும் சுந்தரியம்மாக்கும் பழக்கம் இருக்கிறது உண்மைதான். சுந்தரியோட முதல் புருஷன் விட்டுட்டுப் போனதுக்கு அப்புறம், ரொம்ப பண நெருக்கடில இருந்தாங்க. அப்போதான், ராமலிங்கத்தோட பழக்கம் உண்டாச்சு.” என்று குனிந்த தலை நிமிராமல் கூறினார் தேவகி.

“ஹ்ம்ம், ரெண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை வருமா?” என்று பிரதாப் கேட்க, “அதெல்லாம் அவ்ளோவா தெரியாது. அவரு வரும்போது, என்னை வெளிய அனுப்பிடுவாங்க.” என்றார் தேவகி.

“சோ, கொலை நடந்தன்னைக்கும், அதனாலதான் வெளியப் போனீங்க, அப்படிதான?” என்று சரியாக யூகித்தவன், “சரி சொல்லுங்க, உங்களுக்கு என்ன தோணுது? ராமலிங்கம்தான் சுந்தரியைக் கொலை செஞ்சானா? அப்புறம் ஏன் அதை சூசைட்னு மாத்தி சொன்னீங்க?” என்றான்.

பயத்தில் வியர்த்து வழிய, “சார், ராமலிங்கம் போகும்போது, ‘பார்த்துக்கோ… உண்மை வெளிய தெரிஞ்சுதுன்னா உன்னைக் கொலை செய்யக்கூட தயங்கமாட்டேன்’னு மிரட்டிட்டுப் போனாரு. அப்போ எனக்கு எதுவும் புரியல. வீட்டுக்கு வந்து பார்த்தப்போதான்…” என்று விம்மி அழ ஆரம்பித்தார் தேவகி.

“திலீப், ஸ்டேட்மெண்ட் வாங்கிட்டு ஸ்டேஷன் போயிடுங்க. எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு.” என்ற பிரதாப் அலைபேசியை எடுத்துக்கொண்டு அவனின் வருங்காலத்தை பார்க்கச் சென்றான்.

காரணம், அவள் காட்டமாக அனுப்பியிருந்த செய்திகள்தான்.

‘நீங்க மட்டும் என்னைப் பார்க்க வரல, கல்யாணத்தன்னைக்கு நானும் உங்க முன்னாடி வர மாட்டேன்.’

‘ப்ச், ரிப்ளை கூட பண்ண மாட்டேங்கறீங்க… இப்படியே போனா, எனக்கு நானே தாலி கட்டிக்கணும் போல!’

அவளின் தொடர் செய்திகளைப் பார்த்து, உதட்டில் பரவிய முறுவலை மறைத்துக் கொண்டே, ‘கம் அவுட் ஃபார் அ மினிட்.’ என்ற செய்தியை அனுப்பினான்.

உடனே எல்லாம் சம்மதிக்கவில்லை நைனிகா. சிலபல செய்திப் பரிமாற்றங்களுக்குப் பின்னரே, வெளியே வரச் சம்மதித்திருந்தாள்.

அதற்குள் பிரதாப் ட்யூஷன் சென்டருக்கு வந்திருந்தான். வாசலில் நைனிகாவிற்காக அவன் காத்திருக்க, அவளோ சற்றுத் தொலைவில் ஏதோ ஒரு சிறுமியிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

அந்தச் சிறுமி அழுவது போலிருப்பதையும் கண்டு கொண்டான் பிரதாப்.

சிறிது நேரத்தில் பேசி முடித்து பிரதாப்பை நோக்கி நடந்து வந்தாள் நைனிகா, கண்களில் மன்னிப்பு கேட்கும் பாவனையுடன்.

“சாரி சாரி, கொஞ்சம் லேட்டாகிடுச்சு.” என்று அவள் கூற, “பரவால்ல, அங்க என்ன பிரச்சனை?” என்று நடந்து செல்லும் சிறுமியைச் சுட்டிக்காட்டி பிரதாப் கேட்க, “பாவம் அந்தப் பொண்ணு. கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி யாரோ ஒரு பாவியால ஹராஸ்மெண்ட் செய்யப்பட்டிருக்கா போல. இவ்ளோ நாள் அதை மனசுக்குள்ளேயே வச்சிருந்து, அந்தத் தாக்கத்தால படிப்புல கான்செண்ட்ரேஷன் இல்லாம போயிடுச்சு. அதை விசாரிச்சதுலதான் இதெல்லாம் தெரிஞ்சுது. அவளுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செஞ்சிருக்கோம்.” என்றாள் நைனிகா.

“ஓஹ், போலீஸ்ல கம்ப்ளைண்ட் கொடுக்கலையா?” என்று பிரதாப் வினவ, “ரொம்ப பயப்படுறாப்பா. முதல்ல கவுன்சிலிங் முடியட்டும்.” என்றவள், “அதை விடுங்க, இப்போ நம்ம பிரச்சனைக்கு வாங்க. ஃபோன் காலை எடுக்கலைன்னா, ஒரு மெசேஜாவது பண்ணலாம்ல? இன்னைக்கு நம்ம மீட்டிங்ன்னு ஏற்கனவே ஃபிக்ஸ் பண்ணதுதான? அதை ஞாபகப்படுத்த கால் பண்ணா, என் ஃபோன் காலையே எடுக்கல.” என்று குறை கூறினாள்.

கண்களைச் சுருக்கி புருவத்தைக் கீறிய பிரதாப்போ, ஏதோ சொல்ல வர, அவனைத் தடுத்த நைனிகாவோ, “என்ன ‘பிளீஸ்’ சொல்லப் போறீங்களா? உங்க பிளீஸை நீங்களே வச்சுக்கோங்க.” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“நைனி, என்னோட சூழ்நிலை உனக்கே புரியும்… புரியணும்! நியூஸ்ல பார்க்கிறதான?” என்று பிரதாப் இல்லாத வழக்கமாக இறங்கிப் பேச, நைனிகாவும் சற்று சமாதானமானாள்.

“ம்ம்ம், உங்க வேலை அப்படி! கல்யாணத்துக்கு முன்னாடி இந்தக் கேஸை எப்படியாவது முடிச்சுடுங்க போலீஸ்கார்.” என்றவள், “ஆமா, இப்போ உங்களுக்கு வேலை இல்லையா? இங்க சுத்திட்டு இருக்கீங்க? பைக்கையும் காணோம்.” என்று கேலியாக வினவினாள்.

“தலைக்கு மேல வேலை இருக்குதான்.” என்று சோர்வுடன் பிரதாப் கூற, “நான் கொடுத்த டீபேக்கை யூஸ் பண்றீங்களா இல்லையா?” என்று அக்கறையாகக் கேட்டவள், “உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுது, யூஸ் பண்ணலன்னு. அவங்களும் யூஸ் பண்ணலையாம். உங்களுக்கு…” என்றவளை இடைவெட்டியவன், “இன்னைக்கு குடிக்கிறேன்மா. பிராமிஸ்.” என்று கூறினான்.

மேலும், சில நிமிடங்கள் பேசிவிட்டு இருவரும் அவரவரின் வேலைகளைப் பார்க்கச் சென்றனர்.

*****

பிரதாப் காவல் நிலையத்திற்கு வந்ததும் அவனுக்காகவே காத்திருந்தது போல வந்த திலீப், “சார், முதல் விக்டிமோட மகன் வருண் வீடியோ காலுக்கு ஓகே சொல்லிட்டாரு. இப்போ விசாரணையை ஆரம்பிக்கலாமா?” என்றான்.

பிரதாப்பும் அதற்கு சம்மதிக்க, வருணுக்கு காணொளி அழைப்பு விடுக்கப்பட்டது.

அழைப்பை ஏற்ற வருணோ, “எக்ஸ்டிரீம்லி சாரி சார். கான்டிராக்ட்ல வேலை பார்க்கிறதால, ரொம்ப கெடுபிடியா இருக்கு. அதான் நேர்ல வரமுடியல.” என்று மன்னிப்புடன் ஆரம்பித்தான்.

ஒரு பெருமூச்சுடன் பிரதாப், “உங்க அப்பா, அம்மா கொலைல, உங்களுக்கு யாரு மேலயாவது சந்தேகம் இருக்கா?” என்று வினவினான்

சிறிது யோசித்த வருண், “ஆமா சார். ராமலிங்கம்னு ஒருத்தர் மேல சந்தேகமா இருக்கு.” என்று கூற, பிரதாப்பும் திலீப்பும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

***

கதை போக்கு எப்படி இருக்கு மக்களே? நாங்கள் முடிந்தவரை கதையின் கோர்வையை சரியாக கொண்டு போய்க்கொண்டிருக்கிறோம் என நம்புகிறேன்.

முந்தைய அத்தியாயத்தில் ஏதாவது சொல்லாமல் விடுபட்டு போயிருந்தாலும், அடுத்த அத்தியாயங்களில் அதை எழுத்தாளர்கள் கோர்வையாக கொண்டு வருகிறார்கள்.

உங்கள் பார்வையில் கதைபோக்குயின் போக்கு எப்படி இருக்கு? உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். அப்படியே இந்த அத்தியாயத்தை எழுதிய எழுத்தாளர் யார் என்றும் சொல்லவும். உங்களின் பதிலை தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம்.
 
ஸ்டோரி நல்லா போகுது.... இப்ப bracelet ஓட common இன்னொரு ஆளு சேர்ந்து இருக்கான் அந்த ராமலிங்கம் அவன் கில்லர் இருக்க சான்ஸ் கம்மி பட் அவனை வச்சு கில்லர் யூஸ் பண்ணி இருக்கலாம்

barkavi murali
 
ஒரு பதிவுக்கும் இன்னொரு பதிவுக்கும் இடையில எந்த வித்தியாசமும் இல்ல ஒரே எழுத்தாளர் எழுதுவது மாதிரிதான் இருக்கு. படிக்கற எங்களால் தான் ரைட்டரை கண்டுபிடிக்க முடியலை 😔ராமலிங்கம் தான் கொலையாளியா???
 
கதை ப்ளோ நல்லா இருக்கு, வேறு வேறு ஆத்தர்ஸ் எழுதிய மாதிரியே இல்ல, சூப்பர், எல்லா ஆத்தர்ஸூக்கும் வாழ்த்துகள். 💐💐💐💐,
ராமலிங்கம் மேல தான் எல்லோரும் டவுட் படறாங்க
 
ஹீரோ அடிக்கடி ஹீரோயின் கிட்ட கண்ணை சுருக்கி....புருவத்தை கீரான்.....இது நா படிச்சி இருக்கேன்.....

என் guess..,dikshita Lakshmi ..... இவங்க தான்

ராமலிங்கம்?????இவரா இருக்க வாய்ப்பு இல்லனு தோணுது.....

சுந்தரி வீட்டில் இருந்து வெளி வந்த லிங்கம் அவங்களை மிரட்டி மட்டும் போய் இருக்கலாம்.....

அதுக்கு நடுவில், தான் கொலையாளி அவங்க vein கட் பண்ணி இருக்கணும்.....

ஏன்னா தேவகி, கால் பண்ணும் போது உயிர் இருந்ததுனு தானே சொல்லி இருக்காங்க.....

அப்ப அந்த கொலையாளி....அங்கேயே இருந்துட்டு....அப்பறம் வெளியில் போய் இருக்கணும்......
 
கதை நல்ல போகுது. பார்கவி முரளி.
 
நைஸ் அப்டேட் 🤩
 
Semma but the writer are very talented and the follow the flow of story 1 episode to next episode by very nicely. Really appreciated. But writers name list kidaicha maybe can guess 🤔
 

Latest threads

Top Bottom