• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

Joined
Sep 25, 2025
Messages
114
Reaction score
138
Points
43
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 3

சகாயன் காலை பத்து மணியளவில் தன் கிளினிக் செல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருக்க, தூக்கக் கலக்கத்துடன் வந்த அவன் தம்பி மித்ரன், "குட் மார்னிங் அண்ணா" என்று சொன்னான்.

"குட் மார்னிங் டா! உனக்கு இரவு வேலை என்று அம்மா சொன்னாங்களே, இப்பதான் வீட்டுக்கே வர்றியா?" என்று கேட்டான் சகாயன்.

வானொலி நிலையத்தில் உதவி இயக்குநராக அவன் வேலை புரிவதால், காலை வேலை, இரவு வேலை என மாறி மாறி வரும்.

“வேலை கொஞ்சம் இழுத்துடுச்சு அண்ணா..." என்று தூங்காத தன் சிவந்த விழிகளைத் தேய்த்தபடியே சொன்ன மித்ரன், "அண்ணா, நான் இன்னைக்கு ஃப்ரீ. நீயும் ஃப்ரீ என்றால் எங்கேயாவது போவோமா?" என்று கேட்டான்.

"நான் ரிதன்யாவோட மாலுக்குப் போறேன்டா. கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ண வேண்டிய வேலையிருக்கு. நீயும் வர்றேன்னா வந்து ஜாயின் பண்ணிக்கோ" என்று சகாயன் சொல்ல,

"ஓ... உன் ஆள்கூடப் போறியா? அப்ப சிவபூசையில் கரடி போல நான் எதுக்கு?" என்றான் மித்ரன்.

"மாலுக்குத் தானேடா... நீ வந்து ஜாயின் பண்ணு. எனக்கும் ரிதன்யாவுக்கும் எந்தப் பிராப்ளமும் இல்லை" என்று சகாயன் கூறினான். 'ரிதன்யா' என்ற பெயரைக் கேட்டதுமே மித்ரனின் முகம் பல உணர்ச்சிகளைப் பிரதிபலித்தது.

மித்ரனின் முகத்தில் வந்து போன உணர்ச்சிக் குவியல்களை நுணுக்கமாகக் கவனித்தாள் மித்ரா. சகாயனின் தங்கை மட்டுமன்றி, மித்ரனோடு ஒன்றாகப் பிறந்த இரட்டைச் சகோதரி என்பதால் அவனது முகம் மாறுதலுக்கான காரணம் அவளுக்குத் தெரியும்.

சோபாவில் சாய்ந்து அமர்ந்தபடி, “அண்ணா, இவன் எதுக்கு உங்க கூட வந்து சிவபூசைக் கரடியா நிக்கணும்? எனக்கு இன்னைக்கு ஒரு எக்சிபிஷன் போக வேண்டியிருக்கு, அதுக்கு இவன் கூட வந்தா போதும். நீங்க கிளினிக்கிற்கு நேரமாச்சு, கிளம்புங்க" என்று அந்தச் சூழலை லாவகமாக மாற்றினாள்.

"நீயும் ஃப்ரியா?" என்று மித்ரன் அவளிடம் கேட்க,

"அப்பாவும் அம்மாவும் நம்ம ஆடிட்டரோட மகள் கல்யாணத்துக்குப் போறாங்க. எனக்கு எக்சிபிஷன் போகக் காரோடு ஒரு ஆள் இல்லை. நீ வந்து எனக்கு டிரைவர் வேலை பார்" என்று அவள் சொல்ல,

சகாயன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தபோது, அவன் கிளம்ப வேண்டிய நேரம் ஏற்கனவே கடந்துவிட்டிருந்தது. அந்த அவசரத்தில் சோபாவிலிருந்து சட்டென எழுந்தவன், "நீங்க ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க" என்று சொல்லிவிட்டு, வாசலில் இருந்த தன்னுடைய காலணிகளை வேகவேகமாக அணிந்துகொண்டு வீட்டை விட்டுக் கிளம்பினான்.

“தாங்க்ஸ்டி!” என்றான் மித்ரன்.

தன் சட்டையில் இல்லாத காலரைத் தூக்கி விட்டபடி, “தட் இஸ் மித்ரா!” என்றாள் அவள் பெருமையாக.

“அப்பாடா... எப்படியோ அந்த ரிதன்யாவோட போறதுல இருந்து என்னைக் காப்பாத்திட்டாய் தெய்வமே! இல்லைன்னா என் காதுல சுண்ணாம்பைக் கரைச்சு ஊத்துன நிலைமை ஆகியிருக்கும்" என்று மித்ரன் சொல்ல,

“ரிதன்யாவா? ரெண்டு பேரும் மரியாதையா ‘அண்ணி’ என்று சொல்லிப் பழகுங்க" என்றபடி அவர்கள் இருவருக்குமான தேநீரைக் கொண்டு வந்து கொடுத்தார் ஆனந்தி.

தாய் சொன்னது பிடிக்காத தோரணையில் இருவருமே ஒன்றாகத் தோளைக் குலுக்கினர்.

“உங்க அண்ணா உங்களுக்கு வேணும்னா ரிதன்யாவோட ஒழுங்கா பழகப் பாருங்க. அந்தப் பொண்ணை நாலு வருஷமா லவ் பண்றான் உங்க அண்ணா. என்கேஜ்மென்ட் வேற முடிஞ்சு, இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணத்துக்குத் தேதியும் குறிச்சாச்சு" என்று ஆனந்தி சொல்ல,

ரிதன்யா படித்த, பணக்கார, பண்பான பெண் தான். ஆனால் அவள் பேசும் தோரணையில் இருக்கும் மாறுபாடு மித்ரனுக்கும் மித்ராவுக்கும் மட்டுமே தெரியும். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அவள் சரியாகப் பேசுவது போலத் தோன்றும். ஆனால், அவளோடு இரண்டு வருடமாக 'அண்ணனின் காதலி' என்ற தோழமையுடன் பழகிப் பார்த்த மித்ரனும் மித்ராவும், அவள் பாம்பின் குணம் கொண்டவள் என்றும், சந்தர்ப்பம் கிடைத்தால் விஷத்தைக் கக்கக்கூடியவள் என்றும் கணித்து வைத்திருந்தார்கள்.

“அண்ணாவுக்கு இந்த உலகத்துல இருக்குற நல்ல பொண்ணுங்க ஒண்ணுமே கண்ணுல படலையா? போயும் போயும் அந்த தானியத்தைக் காதலிக்கிறார்!” என்று சொல்லி மித்ரா உதட்டைச் சுழித்தாள்.

“அம்மா, அண்ணாவுக்குக் கல்யாணம் ஆனவுடனே அவங்களைத் தனிக்குடித்தனம் அனுப்பிடுங்க. இல்லைன்னா நான் ஏதாச்சும் மென்ட்ஸ் ஹாஸ்டல் பார்த்து நடையைக் கட்டிடுவேன்" என்றான் மித்ரன் தன் பங்குக்கு.

“நானும்தான்!” என்றாள் மித்ரா.

“எல்லாம் உன்னாலதாண்டி ஆரம்பிச்சது! நீ மட்டும் ‘MBA முடிச்சுட்டுதான் கல்யாணம் செய்வேன், அதுவரை என்னை விடுங்க’ன்னு சொல்லாம இருந்திருந்தா, அண்ணாக்காவது கல்யாணம் பண்ணுவோம்னு அப்பா கிளம்பியிருக்க மாட்டார். அப்ப கல்யாணத்துக்கு ஜாதகம் பார்க்க எடுக்கத்தான்அண்ணா தன் தெய்விகக் காதலை சொன்னான். இப்ப பார், நான் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை!” என்று மித்ரன் பல்லைக் கடித்தான்.

“உனக்கும் ஒரு ஜாதகம் பொருந்தி வந்திருக்குன்னு அப்பா சொன்னார்டா" என்று ஆனந்தி அந்த நேரம் சொல்ல, மித்ரனின் முகம் சட்டென ஆயிரம் வாட்ஸ் லைட் போட்டது போலப் பிரகாசமானது.

“அப்படின்னா என்னைத் தனிக்குடித்தனம் வச்சிடுங்கம்மா!” என்று தாயிடம் சொன்னவன், அடுத்த நொடியே மித்ராவிடம் திரும்பி, “அண்ணா கல்யாணத்துக்கு முன்னாடி என் கல்யாணத்தை முடிக்க ஏதாச்சும் ஐடியா கொடுடி" என்று துளிக்கூட வெட்கமேயில்லாமல் கேட்டான்.

அவன் முகத்தில் மின்னிய அந்தப் பரவசத்தையும், கல்யாண ஆசையையும் பார்த்த ஆனந்திக்கு சிரிப்புதான் வந்தது.

“க்கும்... நீ தப்பிச்சு போயிடுவ, நான் மட்டும் அந்த தானியத்துக்கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப்படணுமா?” என்று மித்ரா முகத்தை நீட்டினாள்.

“ஏய்... நீதானே MBA முடிச்சதுக்கு அப்புறம்தான் கல்யாணம், அதுவரை என் கல்யாணப் பேச்சை வீட்ல எடுக்கக் கூடாது, இல்லாட்டி என் இன்னொரு முகத்தைப் பார்ப்பீங்கன்னு மிரட்டுனது? நாங்களும் இருக்குற ஒரு முகத்தையே பார்த்துச் சகிக்க முடியலை, இதுல இன்னொன்னான்னு பேசாம இருக்கோம்!” என்றான் மித்ரன்.

“அப்போ எனக்கு ரிதன்யா அண்ணியா வரப்போறது தெரியாதுடா. இப்போ இந்த வீட்டை விட்டு எங்கயாச்சும் ஓடணும் போல இருக்கு!” என்று முகம் சும்பிப்போகச் சொன்னாள் மித்ரா.

தங்கள் பேச்சில் தலையிடாமல் இருந்த தாயை நோக்கினான் மித்ரன். ஆனந்தியோ தன் பிள்ளைகளின் பேச்சால் இதயம் கனத்துப் போய், என்ன பேசுவது என்று புரியாமல் இருந்தார்.

“அம்மா...” என்று மித்ரன் அழைக்க, நிமிர்ந்து பார்த்தவரிடம், “மித்ராவுக்கும் மாப்பிள்ளை பார்க்கச் சொல்லி அப்பாகிட்ட சொல்லிடுங்க" என்றான்.

“மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துன கதையா இருக்குடா இது. இது உங்க வீடு, நீங்க இங்கேதான் இருக்கணும். நான் அப்பாகிட்ட இதுக்கு என்ன செய்யலாம்னு கேட்கிறேன்" என்றார் ஆனந்தி நிதானமாக.

“அண்ணா அவன் காதலியை பிரேக் அப் பண்ணுனா மட்டும்தான் இந்தப் பிரச்சனை தீரும்" என்றாள் மித்ரா.

“அவ அண்ணாகிட்ட குழைஞ்சு குழைஞ்சு பேசி கையுக்குள்ள போட்டு வச்சிருக்கா. அண்ணாவும் அவகிட்ட மயங்கிப் போய்க் கிடக்கார். நாம போய் என்ன பேச முடியும்?” என்றான் மித்ரன் வெறுப்பாக.

“டேய்... நம்ம வீட்டுக்கு மருமகளா வரப்போற பொண்ணை இப்படிப் பேசுறது சரியில்லை. நீ போய்த் தூங்கு" என்று மித்ரனிடம் சொன்னவர், “உனக்குத் தூக்கம் தெளிஞ்சுதுன்னா வந்து சமைக்க ஹெல்ப் பண்ணு" என்று மித்ராவிடம் கூறிவிட்டுச் சமையலறைக்குச் சென்றார்.

மித்ரன் தூங்கச் செல்ல, தங்கள் பேச்சுக்கு ஒரு முடிவு கிடைக்காமல் போனாலும், மித்ராவும் தாய்க்கு உதவச் சமையலறைக்குச் சென்றாள்.
 
Previous thread
Next thread
Nxt ep eppa sis??2day illaya?
 

Latest threads

Top Bottom